வைகதஷ்டமியின் சிறப்பு

 

வைகத்தஷ்டமி வைகம் மகாதேவர் கோயில் திருவிழாக்களில் முக்கியமான ஒன்று.  இதற்கு வைத்யநாதர் அஷ்டமி என்றும், மகாதேவர் அஷ்டமி என்றும் பெயர் உண்டு.

 

பிரசித்தி பெற்ற வைகம் மகாதேவர் கோயில் கேரளாவில் கோட்டயத்திற்கு அருகில் உள்ளது. இங்கு இருக்கும் சிவ பெருமான் லிங்க வடிவில் வழிபடப் பெறுகிறார். வைகதஷ்டமி மலையாள மாதமான விருச்சிகத்தில் தேய்பிறை அஷ்டமி அன்று வருகிறது.

 

வைகத்தஷ்டமி 2017 டிசம்பர் 10ம் தேதி அன்று வருகிறது.

 

Significance of Vaikathashtami

 

வைகம் மகாதேவர் கோயிலின் லிங்கம் மிகவும் புராதனமானது. த்ரேதா யுகத்தைச் சேர்ந்தது. 5 அடி உயரம் கொண்டது. பார்க்கப் பெரியதாக உள்ளது. இங்கு ஈசனுக்கு வைகத்தப்பன் எனப் பெயர்.  

 

வைகம்  கோயிலில் வைகத்தஷ்டமித் திருவிழா 12 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. இதில் அஷ்டமி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

 

இந்த விழாவில் வைகம் விளக்கு என்பது  மிகவும் முக்கியமான  நிகழ்ச்சியாகும்.

 

அதே போல்,வைகத்திற்கு அருகே உள்ள உடையனபுரத்தில் உள்ள  சுப்ரமணிய சுவாமி கோயிலில் உள்ள  முருகப் பெருமான் அங்கிருந்து புறப்பட்டு, வைகம் கோயிலில் தனது தந்தையை தரிசிக்க வரும் காட்சியும் சிறப்பாகக் கருதப்படுகிறது.

 

ஏராளமான பக்தர்கள் வைகத்தஷ்டமி அன்று மகாதேவப் பெருமானை தரிசித்து,அவர் அருள் பெறுகிறார்கள்.  

 

 

 

 

 

  

 

service portfolio tag: 
Service Categories: 
Tags:

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    11 + 5 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.