மந்திரம் என்றால் சக்தி எனப் பொருள். தாரக என்றால் நம்மை கரை சேர்க்க கூடியது எனப் பொருள். நம்மை பாபமாகிய சாகரத்திலிருந்து கரை சேர்க்கக்கூடிய தாரக மந்திரமே ராம நாமம்.
சிவனும், நரயனணனும் நமது முக்கியமான தெய்வங்கள். நாராயண மூல மந்திரம் “ ஒம் நமோ நாராயணா” சிவனின் மூல மந்திரம் "ஒம் நமசிவாய"
நாராயண மூல மந்திரம் (ஒம் நமோ நாராயணா)- ல்“ ரா” என்ற எழுத்து உயிராகும். இந்த எழுத்து “ ரா” இல்லையென்றால், அந்த மந்திரம் அர்த்தமற்று போகிறது.
சிவனின் மூல மந்திரம் (ஒம் நமசிவாய) - ல், “'ம' – உயிராகும். இந்த எழுத்து “ம” இல்லையென்றால், அந்த மந்திரம் அர்த்தமற்று போகிறது.
இந்த இரண்டு மூல மந்திரங்களின் உயிர் “ரா மற்றும் “ம” இந்த இரண்டு எழுத்துக்களில் தான் அடங்கியுள்ளது. இவையிணைய 'ராம' வாகும்
‘தியாகராஜ சுவாமிகளும் தனது பாடல் “எவரனி நிர்ணயிஞ்சிரி” – ல் இதை குறிப்பிடுகிறார்
ஸி1வ மந்த்ரமுனகு 3ம ஜீவமு
மாத4வ மந்த்ரமுனகு ரா ஜீவமுயீ
விவரமு தெலிஸின க4னுலகு ம்ரொக்கெத3
விதரண கு3ண 4த்யாக3ராஜ வினுத
" சிவ மந்திரத்திற்கு, 'ம' உயிராகும்; மாதவ மந்திரத்திற்கு, 'ரா' உயிராகும்; இந்த விவரத்தினையறிந்த சான்றோரை வணங்குகின்றேன்"
அதனால் தான் ராம மந்திரத்தை தாரக மந்திரம் என்று குறிப்பிடுகிறோம்.
ராமரின் பெருமைகளை நினைந்து, ராம நாம மகிமைதனை உணர்ந்து, ஜபித்து நமது பாபங்களிலிருந்து விடுதலை பெறுவோம்.
Leave a Reply