மகா சங்கடஹர சதுர்த்தி 2017

சங்கடஹர சதுர்த்தி  ஆகஸ்ட் 11, 2017, வெள்ளிக்கிழமையன்று வருகிறது.

 

விநாயகர் சதுர்த்திக்கு முன் வரும் தேய் பிறை சதுர்த்தி திதி  மஹா சங்கடஹர சதுர்த்தியாகும்.

 

சங்கட ஹர  சதுர்த்தி ஒவ்வொரு மாதமும் தேய் பிறை சதுர்த்தி திதி அன்று அனுசரிக்கப்படுகிறது. சங்கட ஹர சதுர்த்தி விரதம் தேய் பிறை சதுர்த்தி அன்று இருப்பது வழக்கம். பிள்ளையாரின் அனுக்ரகம் பெற விரதமிருந்து, சந்திர தரிசனம் கண்டு, பின் பிள்ளையார் பூஜை செய்து விரதம் முடிப்பது வழக்கம்.

 

சங்கடஹர சதுர்த்தி – விளக்கம்

 

’சங்கட’என்றால் கஷ்டம் மற்றும் ‘ஹர’ என்றால் போக்குதல். சங்கடஹர சதுர்த்தி என்றால் சங்கடங்களை நீக்கும் விரதம் என்று பொருள்.

 

சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் பலன் என்ன?

 

சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் நாம் நம் வாழ்க்கையில் படும் கஷ்டங்களில் இருந்து விடுபடலாம், சோதனைகளை தாண்டி வெற்றி நடை போடலாம், நிறைந்த இறை அருள்  பெறலாம். சங்கடங்களை போக்கும் விக்ன விநாயக மூர்த்தியின் தாள் பணிந்து விரதமிருந்தால் நமக்கு நன்மைகள் பெருகும் என்பதே இந்த விரத பலன்.

 

பிள்ளையாரின் அருள் இருந்தால் எந்தவித தடைக்கல்லையும் தாண்டி விடலாம். இதற்கு சங்கடஹர சதுர்த்தி விரதம் ஒரு எடுத்துக்காட்டு. சங்கட ஹர சதுர்த்தியை ஒரு வருடம் கடைபிடித்தால் நாம் எண்ணிய எண்ணம் நிறைவேறும்.ஒரு வருட முடிவில் மஹா கணபதி ஹோமம் செய்ய வேண்டும்

 

You May Like

 

சங்கடஹரசதுர்த்தி விரதம் எவ்வாறு அனுசரிக்க வேண்டும்?

அங்காரிக சதுர்த்தி

கணபதி ஹோமத்தினால் வியாபாரம் விருத்தி அடையுமா?

 

 

 

 

 

 

 

service portfolio tag: 
Service Categories: 
Tags:

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    7 + 9 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.