மாதம் ஒரு முறை தேய்பிறை சதுர்த்தசி அன்று மாத சிவராத்திரியை கொண்டாடுகிறோம். இந்த சிவராத்திரி மாசி மாதம் வரும் போது இதை மகா சிவராத்திரி எனக் கொண்டாடுகிறோம். பகலும் இரவுமாக விரதம் இருந்து சிவனடி சேரும் வழி கொடுக்கும் நாள் இது.
நம்மின் பாபங்களைதொலைத்து ஆன்மீக சிந்தனையை வளர்த்துக் கொள்ள உதவும் நாளிது.
இந்த வருடம் மகா சிவராத்திரி பிப்ரவரி மாதம் 13ம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று வருகிறது.
மகா சிவராத்திரி அன்று லிங்கத்திற்கு நாலு ஜாம அபிஷேகம் நடக்கும்.
முதல் காலம்
முதல் காலத்தில், அன்ன உருவெடுத்து சிவனின் மேல் பாகத்தை பிரம்மா தேடிய போது அவர் லிங்கத்திற்கு பூஜை செய்கிறார் லிங்கத்திற்கு மஞ்சள் பட்டு வஸ்திரம் சாத்துவார்கள்.
இரண்டாம் காலம்
இரண்டாவது காலத்தில் மஹா விஷ்ணு வராக உருவமெடுத்து சிவனின் அடியைத் தேடிய போது பூஜை செய்கிறார் . லிங்கத்திற்கு வெண் பட்டு வஸ்திரம் சாத்துவார்கள். சந்தனக்காப்பு இந்த காலத்தின் சிறப்பு அலங்காரமாகும்.
மூன்றாம் காலம்
மூன்றாவது காலம் அம்பாள் சிவனை பூஜிக்கும் காலம் இதற்கு லிங்கோத்பவர் காலமென்றும் பெயர் உண்டு.(பிரம்மாவும் விஷ்ணுவும் சிவலிங்கத்தின் முதலும் முடிவும் தேடி சிவனை பூஜித்த நேரமிது.) லிங்கத்திற்கு சிவப்பு வஸ்திரம் சாத்துவார்கள் .
நாலாம் காலம்
நாலாம் காலம் சகல ஜீவராசிகளும் சிவனைத் துதிக்கும் காலமாகும் . இந்த காலத்தில் லிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம், பூஜை, தூப, தீபம் நடைபெறும்.
மகா சிவராத்திரி விரதமிருந்து சிவனை துதித்து கொண்டாடி மகிழ்ந்து இறைஅருள் பெற்று நன்மை அடைவோமாக.
Leave a Reply