பீஷ்மாஷ்டமி | Ama Vedic Services

பீஷ்மாஷ்டமி





இன்றைய தினம் பீஷ்மாஷ்டமி
 
பீஷ்மரை பற்றி அறியாதவர் இல்லை. மகாபாரத்தின் பெரிதும் சிறப்பு மிக்க வீரர். தன்னலமற்று பிறருக்காக வாழ்ந்தவர். கௌரவர்களையும் பாண்டவர்களையும் நல்வழிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டவர். கௌரவர்பக்கம் மேற்கொண்டு குருக்ஷேத்ர போரில் தன் உயிர் துறந்தவர்.
 
தனது சாவை தான் விரும்பும் வேளையில் பெறும் வரம் பெற்றவர் பீஷ்மர்.  அம்புப்  படுக்கையில் பீஷ்மர் சாவை எதிர் நோக்கி  உத்தராயண காலத்திற்காக காத்திருந்து, சூரியன் தனது பயணத்தை வடக்கு முகமாக  திருப்பும் வரை தனது சாவை தள்ளி வைத்தார்.  தை மாதத்தில் வளர் பிறை அஷ்டமிக்காக காத்திருந்து அன்று உயிர் நீத்தார். அந்த நாளே பீஷ்மாஷ்டமி எனப் போற்றப்படுகிறது.
 
பீஷ்மாஷ்டமி அன்று பிதாமகருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தர்ப்பணம் செய்யப்படுகிறது. எள்ளும், நீரும் கொடுத்து இன்று தர்ப்பணம் செய்தால் ஒருவரின் பாபச் சுமை நீங்கும் என்பது உறுதி. கங்கை நீர் கொண்டு கங்கை மைந்தருக்கு தர்ப்பணம் செய்தால் இன்னும் புண்ணியம். குழந்தை இல்லாதவர்கள் இந்த நாளில் விரதமிருந்து தர்ப்பணம் செய்தால் குழந்தைப்பேறு கிடைக்கும்.
 
பிதாமகராம் பீஷ்மரை நினைத்து வணங்கி இந்த பீஷ்மாஷ்டமியில் நற்பலன் பெறுவோம்.
 
 

service portfolio tag: 
Service Categories: 
Share this:
Tags:

About sudha

[field_information]
  • Website
  • Google+
  • Rss
  • Pinterest
  • Instagram
  • LinkedIn
  • Vimeo
  • Youtube
  • Flickr
  • Email

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    6 + 1 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.