பிரதோஷம் சிவ பூஜைக்கு உகந்தது. வளர்பிறை, தேய்பிறைகளில் வரும் திரயோதசியில் சந்தியா வேளையில் அனுசரிக்கப்படுவது.
சிவன் நந்தியின் கொம்புகளில் நின்று ஆடும் அழகிய தாண்டவத்தின் வேளையது.
தேவரும், கடவுளரும், முனிவர்களும் கூடி நின்று சிவனாரின் தாண்டவத்தை கண்டு பக்தி பரவசப்படும் நேரமது.
கார்த்திகை மாதத்தில் வளர்பிறை பிரதோஷம் டிசம்பர் 1 வெள்ளிக்கிழமை வருகிறது.
பிரதோஷ வேளையின் உன்னதியை அறிந்தவர்கள் சிவனின் அளவில்லா கருணைக்கு பாத்திரமாக இந்த வேளையில் விரதமிருந்து, சிவனுக்கு பூஜை செய்கிறார்கள்.
பிரதோஷ வேளையில் உச்சரிக்க வேண்டிய பஞ்சாக்ஷர மந்திரம்
“ஓம் நமச்சிவாய”
இதுவே பிரதோஷ வேளையில் உச்சரிக்க வேண்டிய பஞ்சாக்ஷர மந்திரம். இந்த மந்திரத்தின் மகிமையே தனி. இதனை உச்சரிப்பதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
1. நமது முன்னேற்றத்தை தடுக்கும் கர்ம வினைகள் அகலும்.
2. உடலும் மனமும் ஆரோக்கியம் பெறும்.
3 குடும்பத்தில் அமைதியும்,மகிழ்ச்சியும் பெருகும்.
4. எதிரிகள் நமது பாதையிலிருந்து விலகுவர்.
5. இறுதியில் மோக்ஷம் கிடைக்கும்.
இவ்வளவு நல்ல பலன்களை அளிக்கும் சிவ பஞ்சாக்ஷரி மந்திரத்தை பிரதோஷ வேளையில் உச்சரித்து சிவனின் அருளுக்கு பாத்திரமாவோமே!
Leave a Reply