பிரதோஷ வழிபாட்டின் மகிமை

மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். பிரதோஷம் திரியோதசி திதிகளில் வளர் பிறையிலும், தேய் பிறையிலும் வருவது. 

 

மார்கழி மாத தேய்பிறை திரியோதசி ஜனவரி 14, 2018 அன்று வருகிறது. 

 

Pradosham

 

பிரதோஷ காலம் 

 

திரியோதசி அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை இருக்கும் காலம் பிரதோஷ காலமாகும். பிரதோஷ வேளையில் இறைவனை வழிபடுவதால் நமது முற்பிறவி குற்றங்கள், சகல தோஷங்கள் நீங்கி நலம் கிடைக்கும். பாவம் விலகி புண்ணியம் சேரும்.

 

பிரதோஷ கதை

 

Pradosham story

 

தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையையும் வாசுகி பாம்பையும் கொண்டு  பாற்கடலை கடைந்து அமிர்தம் தேடிய போது ஆலஹால விஷம் தோன்றியது.

 

சிவ பெருமான் அதை உண்டு தேவர்களை காத்தார். அவரின் ஆணையின் பேரில் தேவர்கள் மீண்டும் கடலினை கடைந்து அமிர்தத்தை அடைந்தனர். இது நடந்த நாள் துவாதசி திதியாகும்.

 

தங்கள் சந்தோஷத்தில் சிவனை  தொழ மறந்த தேவர்கள் மறு நாள் தங்கள் தவறை உணர்ந்தனர். அதுவே திரயோதசி திதியாகும்.

 

உடனே இறைவனிடம் சென்று மன்றாட அவரும் அவர்களை மன்னித்து, சந்தோசப்பட்டு நந்தியின் கொம்புகளின் நடுவில் நின்று ஆனந்த தாண்டவமாடினார். இந்த வேளையே பிரதோஷ வேளையாகும்.

 

பிரதோஷ வேளையில் சிவபெருமான் நந்தி பகவானின் கொம்பின் மேல் ஆடும் திருக்கோலம் காணக் கிடைக்காதது. இந்த வேளையில் கோயில் சென்று இறைவனிடம் வேண்டி நின்றால் கேட்டது கிடைக்கும் என்பது உறுதி.

 

பிரதோஷ விரதம் 

 

பிரதோஷ விரதத்தை ஐப்பசி, கார்த்திகை, சித்திரை, வைகாசி மாதங்களில் வரும் சனிப் பிரதோஷத்தன்று தொடங்க வேண்டும். (சனிக்கிழமை அன்று பிரதோஷம் வந்தால் அதற்கு சனிப் பிரதோஷம் என்று அழைக்கப் படுகிறது).  

 

பகலில் உணவு உண்ணக் கூடாது. மாலையில் குளித்து, கோவில் சென்று, இறை வழிபாடு  செய்த பின் சிவனடியார்களோடு சேர்ந்து உணவு உண்ண வேண்டும்.

 

பிரதோஷ காலத்தில் தூங்குவது, படிப்பது, பிரயாணம் மேற்கொள்வது, மந்திர ஜபம் செய்வது, உண்பது,  எண்ணெய் தேய்ப்பது, குளிப்பது  போன்றவற்றை செய்யக் கூடாது.

 

 பிரதோஷ வேளையில் சிவனாரை வணங்கி வாழ்வில் நலம் பெறுவோமாக!

 

 

மேலும் படிக்க 

சிவதாண்டவ மகிமை

சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும் சிவன்

நந்தி பகவான் பற்றிய அரிய சுவையான தகவல்கள்

 

 

 

service portfolio tag: 
Tags:

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    11 + 5 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.