மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும்.
தோஷம் என்றால் குற்றம் என்றும், பிரதோஷம் என்றால் குற்றமற்றது என்றும் பொருள் தரும்.
பிரதோஷம் திரியோதசி திதிகளில் வளர் பிறையிலும் ,தேய் பிறையிலும் வருவது. திரியோதசி அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலமாகும்.
ஐப்பசி,கார்த்திகை,சித்திரை ,வைகாசி மாதங்களில் வரும் சனி பிரதோஷத்தன்று தொடங்க வேண்டும்.
பகலில் உணவு உண்ணக் கூடாது. மாலையில் குளித்து, கோவில் சென்று, இறை வழிபாடு செய்த பின் சிவனடியார்களோடு சேர்ந்து உணவு உண்ண வேண்டும்.
பிரதோஷ விரதமிருந்தால் ஏழ்மை, நோய், பயம், திடீர் மரணம், மரண அவஸ்தை, கடன், அவமானம், பாபம் இவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும். பிரதோஷ வேளையில் இறைவனை வழிபடுவதால் நமது முற்பிறவி குற்றங்கள், சகல தோஷங்கள் நீங்கி நலம் கிடைக்கும். பாவம் விலகி புண்ணியம் சேரும்.
பிரதோஷ காலத்தில் தூங்குவது, படிப்பது, பிரயாணம் மேற்கொள்வது, மந்திர ஜபம் செய்வது, உண்பது, எண்ணை தேய்ப்பது, குளிப்பது போன்றவற்றை செய்யக் கூடாது.
சனிக்கிழமை அன்று பிரதோஷம் வந்தால் அதற்கு சனி பிரதோஷம் என்று அழைக்கப் படுகிறது. மார்ச் இந்த சனி பிரதோஷம் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. அதுவே கிருஷ்ணபட்சத்தில் (தேய் பிறை) சனிக்கிழமையில் வந்தால் "மஹாப் பிரதோஷம்" என்று வழங்கப்படுகிரது
சனி பகவானை பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. வாழ்வில் நிகழும் பல இன்னல்களுக்கு அவரது சக்தியே அடிப்படை காரணமாக இருக்கிறது. நமது கர்ம பலனை வழங்கும் நியாயாதிபதி அவர். ஒன்பது கிரகங்களில் ஒருவராவார். சனி பகவானின் பிடியில் வாழ்வில் எந்த தருணத்திலாவது மாட்டிக் கொள்ள வேண்டும் தான்.
ஏழரை நாட்டு சனியின் சுழற்சி ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் வருவது. இத்தகைய வேளைகளில் படும் அவஸ்தைகளில் இருந்து விடுபட சனி ஆராதனை செய்வது வழக்கம். சனிக் கிழமை அன்று பிரதோஷம் வந்தால் அதற்கு மகிமை அதிகம். சிவனை சனிக்கிழமை அன்று வணங்கி, பிரதோஷ விரதம் இருந்து நம் இன்னல்களில் இருந்து விடுபடலாம்.
தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையையும் வாசுகி பாம்பையும் கொண்டு பாற்கடலை கடைந்து அமிர்தம் தேடிய போது ஆலஹால விஷம் தோன்றியது.சிவ பெருமான் அதை உண்டு தேவர்களை காத்தார்.அவரின் ஆணையின் பேரில் தேவர்கள் மீண்டும் கடலினை கடைந்து அமிர்தத்தை அடைந்தனர். இது நடந்த நாள் துவாதசி திதியாகும். தங்கள் சந்தோஷத்தில் சிவனை தொழ மறந்த தேவர்கள் மறு நாள் தங்கள் தவறை உணர்ந்தனர். அதுவே திரயோதசி திதியாகும். உடனே இறைவனிடம் சென்று மன்றாட அவரும் அவர்களை மன்னித்து, சந்தோசப்பட்டு நந்தியின் கொம்புகளின் நடுவில் நின்று ஆனந்த தாண்டவமாடினார். இந்த வேளையே பிரதோஷ வேளையாகும்.
त्रिदलं त्रिगुणाकारं त्रिनॆत्रं च त्रियायुधं
त्रिजन्म पापसंहारम् ऎकबिल्वं शिवार्पणं
த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரினேத்ரம் ச த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏகபில்வம் ஶிவார்பணம்
பிரதோஷ வேளையில் சிவபெருமான் நந்தி பகவானின் கொம்பின் மேல் ஆடும் திருக்கோலம் காணக் கிடைக்காதது. இந்த வேளையில் கோயில் சென்று இறைவனிடம் வேண்டி நின்றால் கேட்டது கிடைக்கும் என்பது உறுதி.
Leave a Reply