பிரதோஷகாலம் சிவ வழிபாட்டுக்கு மிகவும் உகந்ததாகும்.சுக்ல பக்ஷத்திலும் (வளர் பிறையிலும்) கிருஷ்ண பக்ஷத்திலும் (தேய் பிறையிலும்) வரும் திரயோதசி திதி அன்று பிரதோஷ வேளையாம்மாலை4.30 மணியிலிருந்து 6 மணி வரை சிவனை வழிபட்டால் பிறவி துன்பம் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது உறுதி. மாதம் இரு முறை வரும் பிரதோஷ வேளையில் நந்தி பகவானை வணங்குவது விசேஷம்.
பிரதோஷத்தை பற்றி புராணக் குறிப்பு ஒன்று உண்டு.தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையையும் வாசுகி பாம்பையும் கொண்டு பாற்கடலை கடைந்து அமிர்தம் தேடிய போது ஆலஹால விஷம் தோன்றியது.சிவ பெருமான் அதை உண்டு தேவர்களை காத்தார்.அவரின் ஆணையின் பேரில் தேவர்கள் மீண்டும் கடலினை கடைந்து அமிர்தத்தை அடைந்தனர். இது நடந்த நாள் துவாதசி திதியாகும். தங்கள் சந்தோஷத்தில் சிவனை தொழ மறந்த தேவர்கள் மறு நாள் தங்கள் தவறை உணர்ந்தனர். அதுவே திரயோதசி திதியாகும். உடனே இறைவனிடம் சென்று மன்றாட அவரும் அவர்களை மன்னித்து, சந்தோசப்பட்டு நந்தியின் கொம்புகளின் நடுவில் நின்று ஆனந்த தாண்டவமாடினார். இந்த வேளையே பிரதோஷ வேளையாகும்.
இந்த வேளையில்சிவனை வேண்டுவோர் விரும்பிய வரம் கிடைக்கும் என்பது உறுதி.மற்றும் அனைத்து தேவ கணங்களும் தம் இருப்பிடம் விட்டு இறங்கி சிவ வழிபாட்டில் ஈடுபடும் வேளை இது. எம்பெருமானாம் சிவன் தேவி கௌரியை ரத்தினங்கள் நிறைந்த சிம்மாசனத்தில் அமர வைத்து, திரிசூலம் ஏந்தி,ஆனந்த தாண்டவமாடும் நேரமிது.
சிவ வழிபாடு நடைபெறும் கோவில்களில் பிரதோஷ காலத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. பக்தர்கள் பால்,தயிர், தேன் போன்ற அபிஷேக சாமான்களை அளித்து பூக்களும் மலர்களும் இறைவனின் ஆராதனைக்கு அளித்து சிவனருள் பெறுகிறார்கள். வாழ்வில் முக்தியையும் அடைகிறார்கள்.
त्रिदलं त्रिगुणाकारं त्रिनॆत्रं च त्रियायुधं
त्रिजन्म पापसंहारम् ऎकबिल्वं शिवार्पणं
த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரினேத்ரம் ச த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏகபில்வம் ஶிவார்பணம்
Leave a Reply