திருப்பரங்குன்றத்தின் தனிச்சிறப்பு

 

ஐப்பசி மாதத்திற்கான கார்த்திகை விரதம் நவம்பர் 5, ஞாயிற்றுக்கிழமை வருகிறது.

 

இந்த நாளில் முருகனை  வழிபட்டு, கார்த்திகை விரதமிருப்பவர்களுக்கு  வேண்டிய வரம் கிடைக்கும்.

 

இந்த வேளையில் முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றாம் திருப்பரங்குன்றத்தின் சிறப்பினை பற்றி அறியலாமா?

 

திருப்பரங்குன்றம் ஒரு குகை கோயில். பெரிய பாறையைக் குடைந்து கட்டப்பட்டது.

 

இந்த கோயிலின் ராஜகோபுரம் 15௦ அடி உயரம் உடையது.

 

இந்த கோயில் 8ம் நூற்றாண்டில் மன்னர் மாறவர்மன் சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டது.

 

திருப்பரங்குன்றத்தில் தான் முருக வள்ளல் இந்திரனின் மகளாம் தேவயானையை  திருமணம் புரிந்து கொண்டார். முருகன் சூரபத்மனை அழித்து, இந்திரனின் ராஜ்யத்தை மீட்டுக் கொடுத்த காரணத்தால், அவருக்கு இந்திரன் தேவயானையை மணமுடித்துக் கொடுத்தார்.

 

இத்தகைய பெருமை வாய்ந்த முருகனின் புகழ் பாடி, கார்த்திகை விரதமிருந்து நற்கதி பெறுவோமாக!

 

 

 

 

 

 

 

   

service portfolio tag: 
Service Categories: 
Tags:

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    5 + 5 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.