ஞான காரகனான முருகன்!

தை மாதத்தில் சஷ்டி விரதம் ஜனவரி 23 அன்று வருகிறது.  

 

சஷ்டி அன்று முருகப் பெருமானை துதிப்பது வழக்கம்.இன்றைய தினத்தை முருக பக்தர்கள் சிறப்பு மிகுந்ததாகக் கருதுகிறார்கள். சஷ்டி அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் இருந்து ஆறாவது தினமாகும். மாதம் இரு முறை வருவது.

 

சஷ்டி அன்று விரதமிருந்து முருகனை வேண்டினால் வேண்டியது கிட்டும் என்பது உறுதி. பிள்ளையில்லாதவர்கள் இந்த நாளில் விரதமிருந்து முருகக் கடவுளை பிள்ளை வரம் வேண்டுகிறார்கள்.

 

முருகன் தந்தைக்கு பிரணவ மந்திரம் உபதேசித்தவர்.’ ஓம்’ என்ற சொல்லுக்கு பொருள் உரைத்தவர்.

 

முருகனுக்கு தகப்பன்சாமி என்ற பெயர் வந்த கதை 

 

Sashti Vrata

 

பிரம்மாவிடம் சென்று பிரணவத்தின் பொருள் என்ன என்று கேட்டார் முருகன். பிரம்மாவே அறியாத ரகசியம் அது. அதனால் பிரம்மா முதலில் எழுத்துகளைக் கற்குமாறு முருகனுக்கு அறிவுரை கூறினார். எனினும், தனது தந்தையிடம் சென்று இதே கேள்வியைக் கேட்டார் முருகன்.

 

கந்தன் கேட்ட கேள்விக்கு தனக்கு பதில் தெரியாது என உரைத்தார் அவர் தகப்பனாம் சிவனார். அப்படியாயின் தான் அதற்கு பதில் கூறுவதாகக் கூறினார் முருகன். அவர் எடுத்துக் கொண்ட பீடமோ குரு பீடம்.’ ஓம்’ என்ற பிரணவத்தின் பொருள் உரைப்பவராயிற்றே? குருவாகிவிட்டார் அல்லவா!

 

தனக்கு குருவான மைந்தனை தோளில் தாங்கி, தன்னை விட உயர்ந்த குரு ஸ்தானம் கொடுத்து, அவரிடமிருந்து பிரணவத்தின் பொருள் அறிந்தார் சிவனார் .

 

தனது நாதனுக்கு சுவாமியாக மாறி பிரணவ பொருள் உரைத்தமையால் முருகனை சுவாமிநாதன் என அழைத்தார் பார்வதி. தகப்பன்சாமி எனப் பெயர் வந்ததும் இதனால்தான்.

 

ஓம்’ என்ற மந்திரத்தின் பொருள் அன்பு ஆகும். இந்த அண்டத்தில் நிரம்பி இருப்பது அன்பு ஆகும். இத்தகைய அன்பு மந்திரத்தை போதித்த ஞான காரகன்தான் முருகன். அவரைப் பணிந்து, ஆன்மிக ஒளி பெற்று சஷ்டி விரதமிருந்து நாம் வாழ்வில் வளம் பெறுவோமாக !

 

 

 

 

 

 

 

service portfolio tag: 
Tags:

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    3 + 7 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.