சிவனை மகிழ்விக்க ஒரு வில்வ இலை போறுமே!

 

ஐப்பசி மாத கிருஷ்ண பக்ஷ  பிரதோஷம் நவம்பர் 1ம் தேதி வருகிறது.

 

பிரதோஷ வழிபாட்டின் மகிமை நாம் அறிந்ததே.

 

நாம் பிரதோஷ வேளையில் சிவனை எவ்வாறெல்லாம் மகிழ்வித்து அவரின் அருளை பெறலாம் எனப் பார்ப்போமா?

 

பிரதோஷம் சிவன் மிகவும் சந்தோஷமாக இருக்கும் வேளை. அந்த நேரத்தில் நாம் ஒரு வில்வ இலையையோ, பூவையோ அர்பித்தால் நாம் விரும்பும் வரம் கிடைக்கும்.

 

ஒரு சிறிய விளக்கினை இறைவனுக்காக ஏற்றினால் அவர் உளம் மகிழ்வார்.நம் மேல் அவரது அருள் பார்வையை திருப்புவார்.

 

அன்னை பார்வதியும் மிகுந்த மன மகிழ்ச்சியோடு இருக்கும் நேரம்.அன்னையை பிரதோஷ வேளையில் வணங்கினால் அவளின் நல்லாசி நமக்குக் கிட்டும் என்பது  உறுதி.

 

சிவ  மந்திரங்களையும்,ஸ்லோகங்களையும் கூறுவது நல்லது.சிவன் மனம் மகிழ்ந்தால் நம் மேல் கருணை மழை பொழிவார்.

 

பிரதோஷ வழிபாடு நம் கர்ம வினைகளை நீக்கும்.

 

ஆன்மீக சக்தியைப் பெருக்கும்.இதனால் நமது ஆன்மீக பயணம் தடையின்றி தொடரும்.

 

பிரதோஷ விரதத்தால் செல்வம், ஆரோக்கியம், மதிப்பு மற்றும் மகிழ்ச்சி ஆகியவை கிட்டும்.

 

பெண்கள் ஆண்  மகவு வேண்டி இந்த விரதம் இருப்பார்கள்.

 

இத்தனை பெருமை உடைய  பிரதோஷ நேரத்தை இறை வழிபாட்டில் பயன்படுத்தி சிவனின் அருள் பெறுவோமாக!

 

 

 

 

 

 

 

service portfolio tag: 
Service Categories: 
Tags:

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    4 + 2 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.