2017 ம் ஆண்டு, பிப்ரவரி 11ம் தேதி, சனிக்கிழமை அன்று சந்திர கிரஹணம். இந்த கிரகணம் காலை 4.04 க்கு ஆரம்பித்து 8.23 க்கு முடிகிறது. 6.14 மணியளவில் கிரகணம் அதிகமாக தென்படும்.
இந்த சந்திர கிரஹணம் பெனும்ப்ரல் சந்திர கிரஹணம் ஆகும்.பெனும்ப்ரல் சந்திர கிரஹணம் நமது கண்களுக்குத் தெரிவதில்லை. இதனால் இந்த கிரஹணம் தர்ப்பணம் போன்ற மத சார்புடைய செயல்களுக்கு ஏற்புடையது அல்ல. எனவே அதற்கு நாம் நமது மத சார்பான சடங்குகளை மேற்கொள்ள வேண்டியது இல்லை.
சூரியன், புவி மற்றும் நிலவு ஆகியவை மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் அமையும் நிகழ்வு சந்திர கிரஹணமாகும்.
பூமியின் வெளிபாகத்தின் தேசலான நிழல் பகுதியை சந்திரன் கடக்கும் வண்ணம் ஏற்படும் கிரஹணம், பெனும்ப்ரல் சந்திர கிரஹணம் எனப்படும். மற்றும் இத்தகைய கிரஹணத்தில் சந்திரன் முழுமையாக மறைக்கப்படுவதில்லை. 98 % மட்டுமே மறைபடுகிறார்.
.சந்திரன் உதயமாகாத காலத்தில் ஏற்படும் கிரகணம் நமக்கு தெரிவதில்லை. எனவே அதற்கு நாம் நமது மத சார்பான சடங்குகளை மேற்கொள்ள வேண்டியது இல்லை
Leave a Reply