சந்திர கிரகணம் - அறிய வேண்டிய தகவல்கள்.

சந்திர கிரகணம் ஆகஸ்ட் 7 (ஆடி 22 ) ம் தேதி வருகிறது. திங்கட்கிழமையுடன் கூடி வருவதால், இதற்கு சூடாமணி கிரகணம் என்று பெயர்.

 

கிரகண நேரம்:

 

இரவு 10.51 க்கு தோன்றி 12.49 க்கு (ஆகஸ்ட் 8 ம் தேதி காலை 00. 49) முடிகிறது.

 

தர்ப்பணம் பண்ண வேண்டிய நேரம்

 

ஆகஸ்ட் 7 ம்தேதி இரவு 11.50க்கு மேல் 12.45 க்குள்

 

தர்பணம் செய்பவர்கள் க்ரஹணம் பிடிக்கும் போதும் விட்ட பிறகும் ஸ்நானம் செய்ய வேண்டும்

 

Chandra Grahanam 2017

 

கிரகண தோஷத்தால் பாதிக்கப்படும் நக்ஷத்திரங்கள்

 

  ரோகிணி,  

திருவோணம்,

 உத்திராடம்,

 ஹஸ்தம்,  

அவிட்டம்

 

இந்த நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களும், திங்கட்கிழமையில் பிறந்தவர்களும் பரிகாரம் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

 

பிராமணர் ஒருவருக்கு தேங்காய்,வெற்றிலை பாக்கோடு தட்சிணை கொடுக்க வேண்டும்.

 

க்ரஹண பீடா பரிஹார ஸ்லோகம்

 

योसौ वज्रधरो देव: आदित्यानां प्रभुर्मत:।

सहस्रनयन: चन्द्र:  ग्रहपीडाम् व्यपोहतु।।

 

யோஸௌ வஜ்ரதரோ தேவ: ஆதித்யானாம் ப்ரபுர்மத: I

ஸஹஸ்ர நயனஸ்சந்த்ர:  க்ரஹபீடாம் வ்யபோஹது

 

கிரகண நேரத்தில் செய்ய கூடியதும், செய்ய கூடாததும்

 

1.        சந்திர கிரகணத்திற்கு பல மணி நேரங்கள் முன்பே உணவு உண்ண வேண்டும். பொதுவாக மதியம் 11.30 மணிக்கு பின் சாப்பிடாமல் இருப்பது நலம்.

 

2.        பூஜை மற்றும் இறைவனுக்காக காரியங்கள் இந்த நேரத்தில் செய்ய கூடாது. பூஜை விளக்கு எரியக் கூடாது.

 

3.        தர்ப்பணம் செய்பவர்கள் இரவு 11.50 க்கு பிறகு செய்ய வேண்டும்.

 

4.        கர்பிணி பெண்கள் இரவு 7 மணியிலிருந்து 3.30 மணி வரை வெளியே வரக்கூடாது.

 

5.        கிரகண நேரத்தில் சாப்பிடுவது, குடிப்பது, ஊசியை உபயோகப்படுத்துவது ஆகியவை கூடாது.

 

6.        சந்திர கிரகணம் முடிந்த பின் சந்திரனை தரிசனம் செய்த பின் ஸ்நானம் செய்ய வேண்டும்.

 

7.     அனைவரும் க்ரஹண நேரத்தில் மந்த்ர ஜபம் செய்வது நல்லது அது 100 மடங்கு புண்யத்தை கொடுக்கக் கூடியது

 

8.     இக் கிரஹண புண்ய காலத்தில் நதி ஸ்நானம், ஸமுத்ர ஸ்நானம், தடாக ஸ்நானம் மிக விசேஷம்

 

ஆகஸ்ட் 7 கிரகணம்  இருப்பதால் அன்று நடைபெற இருக்கும் யஜூர் வேத உபகர்மா ( ஆவணி அவிட்டம்) செப்டம்பர் மாதம் 6 ம் தேதி நடைபெறுமென பண்டிதர்கள் முடிவு செய்து உள்ளனர் .

 

 

 

 

 

 

 

 

 

service portfolio tag: 
Service Categories: 
Tags:

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    7 + 7 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.