சங்கடஹர சதுர்த்தி விரதம் கடைபிடிக்கும் முறை



சங்கடஹர சதுர்த்தி  2018  ஜூலை 01, ஞாயிற்றுக்கிழமை.

 

சங்கடஹர சதுர்த்தி ஒவ்வொரு மாதமும் தேய் பிறை சதுர்த்தி திதி அன்று அனுசரிக்கப்படுகிறது. பிள்ளையாருக்கு விரதமிருந்து சந்திரனை கண்டபிறகு பிள்ளையார் பூஜை செய்து விரதம் முறிக்கும் நோன்பு இது.

 

 

சரி, பிள்ளையார் என்றவுடனே நமக்கு தோன்றுவது என்ன? இந்த விரதம் கட்டாயம் இன்னல்களை முறியடிக்க உதவும் விரதமே என்பதே. ஆம்,சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் நாம் நம் வாழ்க்கையில்படும் கஷ்டங்களில் இருந்து விடுபடலாம், சோதனைகளை தாண்டி வெற்றி நடை போடலாம், நிறைந்த இறை அருள் பெறலாம்.

 

 

‘சங்கட’என்றால் கஷ்டம் மற்றும் ‘ஹர’ என்றால் போக்குதல் என்று பொருள். சங்கடங்களை போக்கும் விக்ன விநாயக மூர்த்தியின் தாள் பணிந்து விரதமிருந்தால் நமக்கு நன்மைகள் பெருகும் என்பதே இந்த விரத பலன்.

 

சங்கடஹர சதுர்த்தி விரதம் கடைபிடிக்கும் முறை 

 

Sankatahara Chathurthi

 

அதிகாலை எழுந்து, நீராடி பூஜை அறையில் பிள்ளையார் படம் அல்லது  விக்ரகத்தை வைத்து அலங்கரித்து பிள்ளையார் ஸ்லோகங்களை சொல்லி விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.

 

அவரின் நாமங்களை சொல்லி தொழுதால் விசேஷம். ஸ்லோகம் சொல்லி பழகியவர்கள், சற்றே கடிதான ஸ்லோகங்களை சொல்லலாம். கணேஷ பஞ்சரத்னம் சொல்லலாம்.

 

 

ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்

 

முழு விரதம் இருப்பது உசிதம். காலையிலிருந்து மாலை சந்திர உதயம் கண்டு பின் பிள்ளையார் பூஜை செய்து விரதத்தை முடிப்பது நல்லது. முடியாதவர்கள் பழம்,பால் மற்றும் ஜவ்வரசி உப்புமா ஆகியவற்றை சாப்பிடலாம்

 

பூஜை செய்யும் முறை 

Sankatahara chathurti

சங்கட ஹர சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் சந்திர உதயத்தை மாலையில் கண்ட பின் பூஜை செய்ய வேண்டும். ஒரு வேளை அவர்களால் சந்திரனை நேரடியாக காண முடியவில்லை என்றால் பஞ்சாங்கத்தில் அன்றைய தினம்  எப்போது சந்திர உதயம் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளதோ அந்த நேரத்தில் பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

 

பொதுவாக ஏழு மணி அளவில் பூஜையை ஆரம்பிப்பது நல்லது.

 

சங்கஷ்ட நாஸன ஸ்ரீகணேச ஸ்தோத்ரம்

 

நாரத உவாச -

 

 ப்ரணம்ய ஸிரஸா தேவம் கௌரீபுத்ரம் விநாயகம்
 பக்தாவாஸம் ஸ்மரேந் நித்யம் ஆயு:காமார்த்த ஸித்தயே

                  

ப்ரதமம் வக்ரதுண்டம் ச ஏகதந்தம் த்வீதீயகம்
த்ருதீயம் க்ருஷ்ணபிங்காக்ஷம் கஜவக்த்ரம் சதுர்த்தகம் 

                     

லம்போதரம் பஞ்சமம் ச ஷஷ்டம் விகடமேவ ச
 ஸப்தமம் விக்நராஜம் ச தூம்ரவர்ணம் ததாஷ்டமம் 

                             

நவமம் பாலசந்த்ரம் ச தஸமம் து விநாயகம்
ஏகாதஸம் கணபதிம் ச த்வாதஸம் து கஜாநநம்     

                                      

த்வாதஸைதாநி நாமாநி த்ரிஸந்த்யம் ய: படேந் நர:
ந ச விக்நபயம் தஸ்ய ஸர்வ ஸித்திகரம் ப்ரபோ     

                                 

வித்யார்த்தி லபதே வித்யாம் தநார்த்தீ லபதே தநம்
புத்ரார்த்தி லபதே புத்ராந் மோக்ஷரர்த்தீ லபதே கதிம்   

                                          

ஜபேத் கணபதிஸ்தோத்ரம் ஷட்பிர் மாஸை; பலம் லபேத்
ஸம்வத்ஸரேண ஸித்திம் ச லபதே நாத்ர ஸம்ஸய:

 

அஷ்டப்யோ ப்ராஹ்மணேப்யஸ் ச லிகித்வா ய:ஸமர்ப்பயேத்
தஸ்ய வித்யா பவேத் ஸர்வா கணேசஸ்ய ப்ரஸாதத:                          

 

இதி நாரத புராணே ஸங்கஷ்டநாஸன ஸ்ரீ கணேச ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

 

 

sankatahara chathurti

பொதுவாக, பால், பழம், பூக்களை கொண்டு பிள்ளையாரை ஆராதிப்பது வழக்கம். இந்த நாளில் கொழுக்கட்டையோ, மோதகமோ செய்து நைவேத்யமாகப் படைப்பது விசேஷமான ஒன்று. பிள்ளையாருக்கு இவை இரண்டும் மிகவும் பிடித்த இனிப்பு வகைகள் என்பது நாம் அறிந்த ஒன்று.

 

அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்தால் மிகவும் விசேஷம். பொதுவாக மஞ்சளில் பிள்ளையார் பிடித்து ஆராதிப்பார்கள்.  

 

சங்கடஹர சதுர்த்தியை ஒரு வருடம் கடைபிடித்தால் நாம் எண்ணிய எண்ணம் நிறைவேறும். ஒரு வருட முடிவில் மஹா கணபதி ஹோமம் செய்ய வேண்டும்.

 

செவ்வாய்கிழமைகளில் வரும் அங்காரிக சங்கடஹர சதுர்த்தி விரதம் கடைப்பிடித்தால் வாழ்வில் இன்னல்கள் தீரும் என்பது உறுதி. (அங்கார் என்றால் எரியும் நிலக்கரி  கங்கு என்று பொருள். இந்த சொல் செவ்வாய் கிரகத்தையும் குறிக்கும்)

 

 

பிள்ளையாரின் அருள் இருந்தால் எந்தவித தடைக்கல்லையும் தாண்டி விடலாம். இதற்கு சங்கடஹர சதுர்த்தி விரதம் ஒரு எடுத்துக்காட்டு. இந்த விரதம் இருந்து வாழ்வில் வளம் பெறுவோமாக. பிள்ளையாரின் கருணைக்கு பாத்திரமாவோமாக.

 

 

 

 

service portfolio tag: 
Service Categories: 
Tags:

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    9 + 5 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.