கோவில் தரிசனம்- விஞ்ஞான ரீதியான விளக்கம்கோவில்கள் நமது பாரம்பரிய பொக்கிஷங்கள். நமது வழிபாட்டு ஸ்தலங்கள். கோவில் சென்று இறைவனை வழிபடுவது நமது மரபு. இதன் பின்னணியில் ஏதாவது விஞ்ஞான விளக்கம் இருக்கிறதா? 

 

ஆம். இருக்கிறது. அது என்ன?

 

1. கோவில்கள் கட்டப்படும் இடங்களில் பூமியின் ஆகர்ஷண சக்தி அதிகமாக இருக்கும். இந்த சக்தி வட தென் திசைகளில் ஓங்கி இருக்கும். இந்த இடங்களில் நல்ல சக்திகளை உடைய கதிரலைகள் (positive energy) வீசும்.

 

2.  கர்ப்பக்ரஹத்தில் அதாவது மூல ஸ்தானத்தில் முக்கிய கடவுளின் மூர்த்தியை அமைப்பது வழக்கம். இதற்கு காரணம் இந்த மூல ஸ்தானம் பொதுவாக கோயிலின் நடுப் பகுதியாக இருக்கும். அங்கு பூமியின்  ஆகர்ஷணமும், நல்லசக்தியின் வெளிப்பாடும் அதிகமாக இருக்கும்.

 

3. கோவிலுக்கு வெளியே செருப்பினை விட்டு செல்லும் பழக்கம் நமக்கு உண்டு. ஏனென்றால் கோவிலின் தரைக்கு நல்ல சக்திகளை நமது பாதங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் திறன் உண்டு. இந்த காரணத்தால்  நாம் வெறும் காலோடு கோயில் தரையில் நடக்கும் போது நமக்கு அந்த சக்தி வந்து சேர்கிறது.

 

4.  கோவில் தரிசனம் நம் ஐம் புலன்களையும் தூண்டுகிறது.

 

கோவில் மணி காதுக்கு நல்ஓசை.

 

சூடன் கொண்ட ஆரத்தி தரிசனம் கண்களுக்கு வெளிச்சம்.

 

பூக்கள், ஊதுபத்தி மற்றும் சூடனின் மணம் மூக்கினை வந்து அடையும்.

 

சூடனை கைகளால் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ளும் போது கைகளில் சற்றே வெப்பம் பரவும். இது  நமது தொடுதலாகிய உணர்வினை தீண்டும்.

 

அபிஷேக தீர்த்தத்தை பித்தளை பாத்திரம் கொண்டு தருவார்கள். பித்தளை நமது தோஷங்களைப் போக்கும். மற்றும் அபிஷேக நீரை அருந்துதல் நமக்கு சுவையாக இருக்கும்.

 

5.   கோவில் பிரகாரத்தை சுற்றி வரும்போது நமக்கு கோவிலில்உள்ள நல்ல சக்திகளின் அலைகள் கிட்டுகின்றன. இதனால் எத்தனை முறை சுற்றுகிறோமோ, அத்தனை முறை நல்லது. குறைந்தது  8, 9 முறை சுற்றுவது நலம்.

 

இனி, தினந்தோறும் கோயிலுக்கு செல்வது தானே முறை?

 

 

Service Categories: 
Share this:
Tags:

About sudha

[field_information]
 • Website
 • Google+
 • Rss
 • Pinterest
 • Instagram
 • LinkedIn
 • Vimeo
 • Youtube
 • Flickr
 • Email

  Leave a Reply

  CAPTCHA
  This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
  2 + 4 =
  Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.