கார்த்திகை விரத பலன்கள்

 

கார்த்திகை விரதம் ஜூலை  9, 2018, திங்கட்கிழமை வருகிறது. 

 

கார்த்திகை நட்சத்திரம் அன்று முருகனின் பிறந்த நாளாக வணங்குகிறோம். விரதமிருப்பவர்களுக்கு பலன் நிச்சயம் உண்டு. கோவில்களில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

 

கார்த்திகை ஒரு மாதத்தில் எப்போது வருகிறது?

 

கார்த்திகை 27 நட்சத்திரங்களில் ஒன்று.  சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்தை மாதந்தோறும் கடக்கும் நாளே கார்த்திகை விரதம் எனக் கொண்டாடப்படுகிறது.

 

karthigai

 

கார்த்திகைப் பெண்டிர் யார்?

 

 கார்த்திகை பெண்டிர் அறுவர் முருகனை வளர்த்த கதை நாம் அறிந்ததே. சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய முருக பெருமான் ஆறு குழந்தைகளாக ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டார். அவர் தனது தாய் பார்வதியால் ஒரே குழந்தையாக ஆக்கப்பட்ட போது   சிவன் கார்த்திகைப் பெண்டிரை நட்சத்திரமாக வானில் என்றும் திகழ அருள் பாலினார்.  

 

கார்த்திகை விரத பலன்கள்

 

கார்த்திகை விரதமிருந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி,வாழ்வில் வளம், இன்னல்கள் இல்லாத வாழ்க்கை, குழந்தைச் செல்வம்,குழப்பமில்லாத சிந்தனை ஆகியவை கிட்டும்.

 

குழந்தை இல்லாத பெண்கள் கார்த்திகை விரதமிருப்பது வழக்கம்.அவர்கள் விரைவில் முருகனருளால் குழந்தையை ஈன்றெடுப்பார்கள்.

 

கார்த்திகை விரதமிருந்து வாழ்வில் வளம் பெறுவோமாக!

 

மேலும் படிக்க

 

கார்த்திகை விரதம் - ஒரு விரத வழிகாட்டி

கார்த்திகை விரத மகிமை

கார்த்திகை- முருகனுக்கு உகந்த நன்னாள் !

 

 

 

 

 

 

 

service portfolio tag: 
Service Categories: 
Tags:

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    1 + 18 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.