கர்கிடகம் - ராமாயண மாதம் சிறப்பு

கர்கிடகம் என்பது மலையாளத்தில் ஆடி மாதத்தை குறிக்கும். இந்த வருடம் கர்கிடக மாதம் ஜூலை 17ல் ஆரம்பித்து ஆகஸ்ட் 16 முடிகிறது. 

 

கர்கிடக மாதத்திற்கு ராமாயண மாதம் எனப் பெயருண்டு. ஏனெனில் இந்த மாதத்தில்  மலையாளிகள்  அவர்களின் பழமையான, பிரசித்தி பெற்ற எழுத்தாளர் துஞ்சாத்து ராமனுஜன் எழுத்தச்சன் எழுதிய ஆத்யாத்ம ராமாயணத்தை படிப்பது வழக்கம்.  

Ramayana Month

 

இந்த மாதம் தக்ஷிணாயன புண்ய காலத்தின் ஆரம்பம். தென் மேற்கு பருவ மழை மக்களை புரட்டும் நேரம். இந்த நேரத்தில் அனுபவிக்க கூடிய சிரமங்களை சமாளிக்க மலையாளிகள் ராம கதையை வீட்டில் தினமும் படிக்கிறார்கள்.

 

ஒரு விளக்கை ஏற்றி அதன் முன் அமர்ந்து ஆத்யாத்ம ராமாயணத்தை படிக்க ஆரம்பித்து ,மாத முடிவில் முடிக்கிறார்கள். இது அவர்களுக்கு ஆன்மிக பலனையும், மன அமைதியையும், வாழ்வில் வளத்தையும் அளிக்கிறது.

 

 

வாழ்க்கை முறை மாறி வரும் இந்த நாளில் ராமாயணம் படிப்பது நமது பாரம்பரியத்தை விடாமல் கடைபிடிப்பதுதானே? அதற்கு ராமாயண மாதம் நல்வழி காட்டுகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
service portfolio tag: 
Service Categories: 
Tags:

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    1 + 4 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.