ஆருத்ரா தரிசனம் மார்கழி மாதத்தில் பௌர்ணமியும் திருவாதிரை நட்சத்திரமும் சேரும் நாளில் வருகிறது. இந்த நாள் சிவ பெருமானின் தாண்டவத்தைக் குறிக்கும் வண்ணம் அமைகிறது. சிதம்பரத்தின் நடராஜர் கோலம் இந்தத் தாண்டவத்தை விளக்கும் வண்ணம் உள்ளது.
இந்த வருடம் ஆருத்ரா தரிசனம் ஜனவரி 2ம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று வருகிறது.
சிவாலயங்களில் நடராஜ வழிபாடு
ஆருத்ரா தரிசனம் அன்று சிவாலயங்களில் சிவனாருக்கு சிறப்புப் பூஜைகளும்,அபிஷேகமும் நடைபெறும்.இன்றைய தினம், நடராஜர் சிலையை ஊர்வலத்தில் எடுத்து வரும் போது தரிசனம் செய்வது நல்லது. சிதம்பரம் கோயிலில் ஆருத்ரா தரிசனம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும்
ஆருத்ரா தரிசனம் அன்று அளிக்கப்படும் நெய்வேத்யம்
திருவாதிரைக் களி ஆருத்ரா தரிசனம் அன்று சிவனுக்கு அளிக்கப்படும் நெய்வேத்யமாகும்.திருவாதிரைக் களி அரிசியும்,பாசிப்பருப்பும் கொண்டு செய்யப்படும் இனிப்பு உணவாகும். இந்த களிப் பிரசாதத்தை உண்டால் வாழ்வின் இன்னல்கள் அகலும் என்பது ஐதீகம்.
திருவாதிரை (ஆருத்ரா தரிசனம்) அன்று சிவனை தரிசித்து இன்னல் அற்ற வாழ்வு பெறுவோமாக!
Leave a Reply