அனைத்தும் அளிக்கும் அங்காரிக சதுர்த்தி விரதம்

 

ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தி நவம்பர் 7ம் தேதி வருகிறது. இது செவ்வாய் கிழமை வருகிறது. எனவே அங்காரிக சதுர்த்தி என அழைக்கப்படுகிறது.

 

‘அங்கார’ என்ற வார்த்தை ‘நெருப்புக் கங்கு’ எனப் பொருள்படும். செவ்வாய் கிரகத்தையும் குறிக்கும். அங்காரிக சதுர்த்தி விசேஷமானது. பக்தர்கள் விரதமிருந்து  தாங்கள் விரும்பியதை விநாயகரிடம் வேண்டிப் பெறும் நாள். இந்த சதுர்த்திக்கு பின்னணியில் ஒரு புராண கதை உண்டு.

 

 அங்காரிக சதுர்த்தி எனப் பெயர் வரக் காரணம்

 

Angarika Chaturthi

 

அன்னை பூமி பாரத்வாஜ முனிவரின் மகனை ஏழு வருடங்களுக்கு வளர்த்து வந்ததாக கணேஷ புராணத்தின் உபாசனா காண்டம் சொல்கிறது. அதற்கு பின் அந்த மகனை பாரத்வாஜ முனிவரிடமே அன்னை பூமி சேர்த்து விடுகிறாள். தனது மகனை முனிவரும்  கல்வி கேள்விகளில் சிறக்க வைத்து கணபதி மந்திரமும் உபதேசிக்கிறார். கணபதி மந்திர உபதேசம் பெற்ற மகன் காடு சென்று தவம் புரிய  விரும்புகிறான் . முனிவரும் அனுப்பி வைக்கிறார்.

 

 கடும் தவத்தின் மூலம் கணபதியை நேரே தரிசிக்க முடிந்த மகனிடம் கடவுள் அவன் வேண்டும் வரம் யாதென கேட்கிறார். தேவர்களுடன் உண்ணும் பாக்கியம் கோரும் அவர் தான் தவமிருந்து கடவுளின் தரிசனம் பெற்ற அந்த நாளில் யார் கணபதியை வேண்டினாலும் அவர்களுக்கு நலம் உண்டாகும் வரம் வேண்டுகிறார்.

 

 மகிழ்ச்சியுற்ற  பிள்ளையாரும் அவ்வண்ணமே வரமருளி மற்றும் அந்த தினம் அங்காரிக சதுர்த்தி எனக் கொண்டாடப்படும் என்றார். இந்த புதல்வர் அன்னை பூமியின் புதல்வர் மற்றும் சிகப்பு நிறத்தவர். எனவே அவருக்கு அங்காரகன் எனப் பெயர் சூட்டிய பிள்ளையார் அந்த சதுர்த்திக்கு அங்காரிக சதுர்த்தி எனப் பெயரிட்டார்.

 

பிள்ளையார் முழு முதற் கடவுள். அவரை வணங்கி எந்த காரியத்தையும் தொடங்கினாலும் வெற்றி நிச்சயம். சங்கடஹர சதுர்த்தி அன்று அவர் தன்னை வணங்கி வழிபடுபவர்களுக்கு வேண்டிய வரம் அளிப்பார்.

 

இப்பேற்பட்ட எம்பெருமானை அங்காரிக சதுர்த்தி அன்று வணங்கி, விரதமிருந்து பயன் பெறுவோமாக.

 

 

 

 

 

 

 

 
service portfolio tag: 
Tags:

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    8 + 0 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.