பெப்ரவரி 28, 2017 09:56 பிப

ஹோமத்தின் மூலம் விபத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியுமா? 

விபத்துக்கள் நம் வாழ்வின் அன்றாட நிகழ்வுகள்.எங்கு திரும்புங்கள் விபத்துக்கள். தொலை பெட்டியை திருப்பினால் விபத்துக்கள். சரி, இந்த விபத்திலிருந்து என்னை காப்பாற்றிக் கொள்ள முடியாதா? என்ன செய்வது?- நீங்கள் எண்ணுவது புரிகிறது.

 

நீங்கள் கார் ஓட்டுவதில் வல்லுநராக இருக்கலாம். சாலை கோளாறாலோ, எதிரில் வருபவர் தப்பு செய்தாலோ என்ன செய்ய முடியும்

 

விபத்திலிருந்து காப்பற்றிக் கொள்ள ஏதாவது வழி உண்டா?

 

வழி உண்டு. ஹோமம் என்பதே அந்த வழி. உங்கள் ஜாதகத்தில் அமைந்துள்ள கிரஹ கோளாறுகளால் உங்களுக்கு விபத்துக்கள் நடக்க வழி உண்டு. ஒரு ஜோதிடரால் இதனை கணித்து உங்களுக்கு  விபத்து நடக்க வாய்ப்பிருக்கும் நேரங்களை எடுத்து சொல்ல முடியும். உங்கள் தசாபுக்தியை அனுசரித்து நடக்க இருப்பவைகளை ஜோதிடரால் எடுத்துக் கூற முடியும்.

 

சரி, இந்த நேரங்களில் உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?

 

ஹோமம் மூலம் உங்களை தற்காத்துக் கொள்ளலாம். 

 

navagraha homam service

 

நவக்ரஹ ப்ரீத்தி ஹோமம் செய்வதன் மூலம் உங்கள் ஜாதகத்திலுள்ள கிரஹங்களை சாந்தப்படுத்தி உங்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படுத்தா முடியும். இந்த ஹோமம் உங்களுக்கு விபத்து போன்ற பெரிய கஷ்டங்கள் ஏற்படாமல் இருக்க நவக்ரஹங்களின் அனுக்ரஹத்தை தேடிக் கொடுக்கும். நல்லதொரு பூஜை, ஹோமம் சேவை மையம் மூலம் இந்த ஹோமத்தை செய்தால் உங்களுக்கு பலன் நிச்சயம்.

 

 

வேறு எதாவது ஹோமம் உண்டா?

 

உண்டு. ஆயுஷ ஹோமம், மஹா கணபதி ஹோமம், மஹா ம்ருத்யுஞ்சய ஹோமம் செய்வது நமக்கு அரணாக அமையும்.

 

ஆயுஷ ஹோமம்

 

Aayush homam services

ஆயுஷ ஹோமம் என்பது நாம் பிறந்தமாதத்தில், பிறந்த நட்சிரத்திரத்தன்று செய்வதாகும். ஆயுஷ தேவதையின் அருளை வேண்டி செய்யப்படும் இந்த ஹோமம் நமக்கு நீண்ட ஆயுளையும் வாழ்க்கை வளத்தையும் அளிக்கும். பொதுவாக முதல் பிறந்த நாளன்று நாம் ஆயுஷ ஹோமம் நடத்துவது வழக்கம். அதற்கு பின்னும் ஒவ்வொரு வருடமும் நாம் பிறந்தமாதத்தில் பிறந்த நக்ஷத்திரத்தன்று ஆயுஷ ஹோமம் செய்து கொண்டால் நமக்கு வாழ்வில் நலன் உண்டாகும். ஆயுள் நீண்டு ஆரோக்கியம் மேம்படும். விபத்து போன்ற தீய விளைவுகள் குறையும்.

 

 

ம்ருத்யுஞ்சய ஹோமம்

 

Mruthyunjaya homam services

விபத்துக்கள் நம் மனதில் பயத்தை தூண்டுபவை. சாவை பற்றிய எண்ணத்தை ஏற்படுத்துபவை. சிவனை வேண்டி ம்ருத்யுஞ்சய ஹோமம் செய்தால் மரண பயம் நீங்கும். ஆயுள் நீளும். தீய சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்கும். எனவே ம்ருத்யுஞ்சய ஹோமம் அவ்வப்போது நடத்துவது நல்லது. சாலையில் நீண்ட பயணம் மேற்கொள்வோர் ம்ருத்யுஞ்சய ஹோமம் செய்தால், அது  அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்.

 

 

மஹா கணபதி ஹோமம்

 

மஹா கணபதி ஹோமம் வாழ்வின் தடை கற்களை நீக்கி வளம் அளிக்க வல்லது. நீங்கள் வருடத்திற்கு ஒரு முறை அல்லது எந்த ஒரு முக்யமான நிகழ்வுக்கு முன்னும் கணபதி ஹோமம் செய்தால் உங்கள் வாழ்வை அழிக்க கூடிய தீய சம்பவங்கள் உங்களை தீண்டாது என்பது உறுதி.

 

ஒன்று மட்டும் நிச்சயம். இந்த ஹோமங்கள் ஒரு நாள் பொழுதுக்கானவை அல்ல. இவற்றை அடிக்கடி செய்து வந்தால் தான் நிரந்தர பலன் கிடைக்கும்.

 

ஹோமத்தின் பொதுப்படையான பலன்கள்

 

ஹோமம் செய்வதால் உடலின் நாடிகளும்,சக்கரங்களும் சுத்திகரிக்கப்படுகின்றன. உடலில்ஆக்சிஜன்அதிகமாக புழங்குகிறது. மனம் தூய்மை அடைகிறது. ஆத்ம ஞானம் கிடைக்கிறது. மற்றும் சுற்றுப்புறம் தூய்மை பெறுகிறது. சுற்றுப்புற மாசு குறைகிறது.

 

அமாவேதிக் மையத்தை அணுகி ஹோமத்தைப் பற்றி மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்..

 

 

 

Share this:
Tags:

About sudha

[field_information]
 • Website
 • Google+
 • Rss
 • Pinterest
 • Instagram
 • LinkedIn
 • Vimeo
 • Youtube
 • Flickr
 • Email

  Leave a Reply

  CAPTCHA
  This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
  9 + 7 =
  Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

  சிறப்பு காணொளி

  வானிலை

  Chennai

  Today, எப்ரல் 24, 2019
  Sunrise: 05:51
  Sunset: 18:23
  02:30-06:30

  நியாயம்

  நியாயம்
  28 °C / 82 °F

  Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK