யாகம் என்பது ஹிந்துக்களின் வாழ்வின் முக்கிய அம்சமாகும். காற்று எப்படி ஸ்வாசத்திற்குத் தேவையோ அது போல் யக்ய பலன்களும் நம் வாழ்வில் தேவையானவை. பித்ரு சேவைகளும் தெய்வ சேவைகளும் யக்ஞம் புரிவதன் மூலம் நிறைவேறும். நல்லதொரு ஸ்ராத்தம் சேவைகள் செய்பவர்களை அணுகுவதன் மூலம் நீங்கள் பித்ரு காரியங்களை செவ்வனே நடத்திக் கொள்ளலாம்.
யக்ஞம் என்பது அக்னி மூட்டி ஒரு கடவுளையோ, பித்ருக்களையோ வணங்குவதற்காக செய்வது. இதை செய்யும் கர்த்தா (ஸ்ராத்தம் செய்பவர்) இதனால் ஏதாவது ஒரு பலன் பெறுகிறார். தெய்வங்களை வணங்கி செய்யும் யக்ஞம் நமக்கு இறையருள் தேடித் தந்தால், ஸ்ராத்தம் நமக்கு பித்ருக்களின் ஆசியைத் தேடித் தருகிறது.
ஸ்ராத்தம் ஒருவர் தனது முன்னோரை நினவு கூர்ந்து அவர்களுக்கு பிண்டமும் தண்ணீரும் அளிப்பதன் மூலம் , அவர்களின் பசியையும் தாகத்தையும் தீர்த்து தனது நன்றி கடனை செலுத்தும் முகமாக செய்யப்படுவது . முன்னோர்களை பித்ரு லோகத்திலிருந்து பிரம்ம லோகத்திற்கு அனுப்புவதற்காக செய்யப்படுவது. பித்ரு சேவை செய்வதன் மூலம் அவர்களது ஆசி பெற முடிகிறது. வாழ்வில் எல்லா நலனும் பெற முடிகிறது.
ஸ்ராத்தம் செய்வது கட்டாயமான ஒன்றா?
ஆம். ஏனெனில் ஸ்ராத்தம் செய்யும் போது கர்த்தா, பிண்டமும் தண்ணீரும் தனது முன்னோருக்குப் படைக்கிறார். அதுவே அவர் தனது முன்னோர்களுக்கு அளிக்கும் உணவாகும். யம கிங்கரர்களால் யம லோகத்திற்கு கொண்டு செல்லப்படும் உயிர் அங்கு நரக வேதனையையோ சொர்க்க வாசத்தையோ தத்தம் பாப புண்ணியத்துக்கு தகுந்தால் போல் அனுபவிக்கிறது. பிறகு அங்கேயிருந்து பித்ரு லோகத்திற்கு செல்கிறது. அங்கு சூக்ஷ்ம சரீரம் கொண்டு மறு பிறவி எடுக்கும் நேரம் வரை காத்து இருக்கிறது.
பித்ரு லோகத்திற்கு செல்லும் வேளையில் நம் முன்னோர்கள் பசியாலும் தாகத்தாலும் வாடுவர். அந்த நேரம் நாம் செய்யும் ஸ்ராத்தம் மூலம் பிண்டமும் நீரும் அளித்தால் அவர்களின் பசியும் தாகமும் அடங்கும். இதற்காகவே நாம் ஸ்ராத்தம் செய்ய வேண்டியது நம் கடமையாகும். மற்றும் நமது ஒரு வருடம் நம் பித்ருக்களுக்கு ஒரு நாளாகும். எனவே வருடம் ஒரு முறை ஸ்ராத்தம் செய்யும் போது நாம் நம் பித்ருகளுக்கு ஒவ்வொரு நாளும் உணவு அளிக்கிறோம். இப்படி மூன்று தலைமுறைகளுக்கான முன்னோர்கள் பித்ரு லோகத்தில் நம் உணவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
ஸ்ராத்தம் செய்யவில்லை எனில் நாம் நம் முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். தொடர்ந்து வரும் வினை பயன்களால் கஷ்டப்பட வேண்டி இருக்கும். வாழ்வில் சந்தோசம் சுகம் இழந்து துக்கப்பட வேண்டி இருக்கும்.
மற்றும், ஒவ்வொரு முறை ஸ்ராத்தம் செய்யும் போதும் நம் முன்னோரை பிரம்ம லோகத்தில் சேர்ப்பதற்காக “பிரம்ம லோகே சுக நிவாசம் ப்ராப்த்திரஸ்து” என சொல்லுகிறோம். நம் முன்னோர்களை கரை சேர்ப்பதற்காக சொல்லும் வாசகமே இது.
புதல்வர்கள். ஒரு குடும்பத்தின் ஆண் வாரிசு ஸ்ராத்தம் செய்யக் கடமைப்பட்டவர். இதனாலேயே ஒரு குடும்பத்தில் பிறக்கும் ஆணுக்கு ‘புத்திரன்’ எனப் பெயர் உண்டு. ’புத்’ என்றால் நரகம் என்று சமஸ்கிருதத்தில் அர்த்தம். நரகத்திலிருந்து முன்னோரை விடுவிக்கவே புத்திரன். எனவே அவன் தனது கடமை தவறாமல் ஸ்ராத்தம் செய்ய வேண்டும் என்பது கட்டாயம்.
எவனொருவன் பித்ரு சேவையை சரிவர செய்கிறானோ அவன் தனது முன்னோரை மட்டுமன்றி எல்லா உயிரினங்களையும் மகிழ்ச்சிப்படுத்துகிறான். எனில் நாம் நம் முன்னோரை திருப்திப்படுத்தி நம் வாழ்வில் வளம் பெற தடையென்ன உள்ளது? நல்லதொரு சேவை மையத்தை அணுகுங்கள், ஸ்ராத்தத்தை நன்முறையில் செய்து பலன் அடையுங்கள்.
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply