டிசம்பர் 26, 2017 11:15 முப

வைகுண்ட ஏகாதசி மகிமை

கங்கையை விடச் சிறந்த தீர்த்தம் இல்லை.

விஷ்ணுவை விட உயர்ந்த தெய்வம் இல்லை.

காயத்ரியை விட உயர்ந்த மந்திரம் இல்லை.

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.

ஏகாதசியை விடச் சிறந்த விரதம் இல்லை.

 

வைகுண்ட ஏகாதசி மார்கழி மாதத்தில் வரும் சுக்ல பக்ஷ ஏகாதசி அன்று கொண்டாடப்படுகிறது. இது வைஷ்ணவர்களால பெரிதும் போற்றப்படும் தினமாகும். இந்த நாளில் நோன்பிருந்து, கண் முழித்து நனி நாராயணனின் துதி செய்வோருக்கு பிறப்பின்மை கிட்டும் என்பது உறுதி.

 

இந்த வருடம் வைகுண்ட ஏகாதசி  டிசம்பர் 29,  வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. 

 

வைஷ்ணவர்கள் வருடத்தின் 24 ஏகாதசிகளையும் விரதமிருந்து கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். அதிலும் தனுர் (மார்கழி) மாதத்தின் சுக்ல பக்ஷ ஏகாதசியை பெரிதும் மகத்துவம் வாய்ந்ததாக கருதுகிறார்கள். 

 

வைகுண்ட ஏகாதசியை தென் இந்திய பிரதேசங்களில் விமரிசையாக கொண்டாடுகிறார்கள். கேரளாவில் இதனை சுவர்கவதில்  ஏகாதசி எனச் சொல்கிறார்கள். வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோட்டி ஏகாதசி  என்றும் பெயர் உண்டு.

 

சாமானியரும் இறைவனடி  அடைய முயற்சித்தால் வைகுண்ட ஏகாதசி அன்று பகவான்  விஷ்ணுவின் நாமத்தை உச்சரித்து எளிதில் .பிறவிப் பிணியிலிருந்து விடுதலை பெறலாம்

 

ஏகாதசி என்ற பெயர் ஏன் வந்தது?

 

Ekadashi story

பத்ம புராணத்தில் ஒரு செய்தி உண்டு.முரன் என்னும் அரக்கன் தேவர்களை பெரிதும் துன்புறுத்தி வந்தான். அவர்கள் பரமேஸ்வரனை அணுகி வேண்ட, அவரும் பகவான் விஷ்ணுவே முரனை அழிக்க வல்லவர் எனக் கூறினார். விஷ்ணுவும் முரனை அழிக்க புதியதொரு ஆயுதம் தேவை என்பதை எண்ணிக் கொண்டு, ஒரு குகையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

 

அந்த சமயம் அங்கு வந்த முரன் அவரை அழிக்க முயன்றான். தூங்கிக் கொண்டிருந்த விஷ்ணுவிடம் இருந்து ஒரு பெண் சக்தி எழுந்தது. அவள் தனது  பார்வையால் முரனை எரித்து சாம்பலாக்கினாள். அவளின் சக்தி கண்டு மகிழ்ந்த விஷ்ணு அவளுக்கு ஏகாதசி எனப் பெயரிட்டார். 

  

HANDPICKED RELATED CONTENT:

 

ஏகாதசி விரத பலன்களும் கடைபிடிக்கும் முறையும்

 

வைகுண்ட ஏகாதசியைப் பற்றிய புராணச் செய்தி 

 

வைகுண்ட ஏகாதசி பற்றி விஷ்ணு புராணத்தில் ஒரு செய்தி உண்டு. பகவான் விஷ்ணுவை வைகுண்டத்தில் வாயிலில் இருந்து இரு அரக்கர்கள் பிரார்த்தனை  செய்தார்கள். விஷ்ணுவும் வைகுண்டத்தின் கதவை திறந்து கொண்டு வெளி வந்து அவர்களுக்கு காட்சி தந்தார். அந்த அரக்கர்கள் தங்கள் கதையைக்  கேட்டு, கோயில்களில் வைகுண்ட  வாசல் வழியாக சென்று விஷ்ணுவை தரிசனம் செய்பவர்களுக்கு வைகுண்டம் சேரும் பாக்கியம் அருள வேண்டும் என வேண்டினார்கள்.

 

இன்றும் பக்தர்கள் விஷ்ணு கோயில்களில்  வைகுண்ட ஏகாதசி அன்று வைகுண்ட த்வாரம் வழியாக சென்று பகவானை சேவித்து முக்தி வழி தேடுகிறார்கள்.

 

பௌஷ புத்ரதா ஏகாதசி

 

Vaikunta ekadashiவட இந்தியாவில் வைகுண்ட ஏகாதசி தினம் பௌஷ புத்ரதா ஏகாதசி என அறியப்படுகிறது. இந்த ஏகாதசி விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். சகல பாபங்களும் நீங்கும். வித்தை, புகழ் ஆகியவை கிட்டும்.

 

பௌஷ புத்ரதா ஏகாதசி விரத கதை கேட்டாலே அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும். இந்த ஏகாதசியின் பின்னணியில் ஒரு கதை இருக்கிறது. இதனை ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனருக்குக் கூறுகிறார்.

 

முன்பொரு காலத்தில், பத்ராவதி என்னும் நகரை ஸுகேதுமான் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு சைவ்யா என்றொரு ராணி இருந்தாள். இருவருக்கும் குழந்தை பாக்கியம் இல்லை. தங்களுக்கு குழந்தை இல்லாததால் பித்ருக்களுக்கு சேவை செய்ய யாரும் இல்லையென மன்னன் வருத்தப்பட்டான்.

 

ஒரு நாள் ஸுகேதுமான் காட்டிற்கு வேட்டைக்குப் புறப்பட்டான்.மதியம் வரை காட்டில் வேட்டைக்கு விலங்குகளைத் தேடி அலைந்த மன்னன் அந்த கானகத்தில் பல விதமான பட்சிகளையும், மரங்களையும் கண்டு ஆச்சர்யப்பட்டான். அவனை பசியும், தாகமும் வாட்டியது. கானகத்தின் உள்ளே சென்று பார்த்த போது, அவனுக்கு அங்கே ஒரு கூடாரம் தென்பட்டது. அங்கே சில மகரிஷிகள் இருப்பதையும் கண்டான்.  

 

அவர்களை வணங்கி, அவர்கள் அங்கே வந்து இருக்கும் காரணம் கேட்டான். அதற்கு அவர்கள் அன்று பௌஷ புத்ரதா ஏகாதசி என்றும், அந்த நாளில் விரதமிருந்தால் குழந்தைப் பேறு கிட்டும் என்றும், அவர்கள் அன்று அங்கே ஏகாதசி விரதமிருக்கப் போவதாகவும் கூறினர்.

 

இதனைக்  கேட்ட மன்னன் அவர்களிடம் தனக்கு குழந்தைiப் பேறு இல்லாததைக் கூறினான். முனிவர்கள் அவனை அன்று தங்களோடு விரதமிருக்கச் சொன்னார்கள். மன்னனும் அவ்வண்ணமே செய்தான். இதனால் அவனுக்குப் பிள்ளை பேறு வெகு விரைவில் கிட்டியது.

 

பௌஷ புத்ரதா ஏகாதசி விரதம் அவ்வளவு மகிமை வாய்ந்தது.

 

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி

 

vaikunta Ekadashi

ஸ்ரீரங்கத்தில், ரெங்கநாதர், ரத்ன அங்கி அணிந்து, ஆயிரங்கால் மண்டபத்திற்கு கருவறையிலிருந்து எழுந்தருளுவது திவ்யமான காட்சி. அவர் இந்த நாளில் பரமபத வாசல் வழியாக ஆயிரம்கால் மண்டபத்திற்கு வருகிறார்.

 

இந்த பரமபத வாசல் ஏகாதசி அன்று மட்டுமே திறந்திருக்கும். பக்தர்கள் அதில் நுழைந்து பகவானை தரிசித்தால் மோக்ஷம் பெறுவதாக ஐதீகம்.

 

 

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி 

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருவறையை சுற்றி வைகுண்ட  த்வாரம் உண்டு. அது வைகுண்ட ஏகாதசி அன்றே திறந்து இருக்கும். பக்தர்கள் அந்த த்வாரம் வழியாக சென்று பாலாஜியை தரிசித்தால் அவர்களுக்கு மோக்ஷம் கிடைக்கும் என  கணக்கிடலங்காத பக்தர்கள் அன்று திருப்பதி செல்கிறார்கள்.

 

பத்ராசலம் கோயிலிலும் வைகுண்ட ஏகாதசி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

 

வைகுண்ட ஏகாதசி விரத முறை

 

Vaikunta Ekadashi

விரதம் இந்த நாளின் முக்கியமான அம்சமாகும்.

 

நோன்பிருப்பவர்கள் வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாள்  மதிய உணவு உட்கொண்டு மறு நாள் ஒன்றும் சாப்பிடாமல் இருப்பார்கள்.

 

சிலர் தண்ணீர் கூட அருந்துவது இல்லை.

 

முடியாதவர்கள் பாலும் பழமும் உண்டு விரதமிருப்பார்கள்.

 

இரவில் கண் விழித்து ஹரி கதை சொல்லிக், கேட்டு ஸ்லோகங்கள் சொல்லி மறுநாள் விடிகாலையில் சுவர்க்க வாசல் திறப்புக்கு கோயில் சென்று பகவானை தரிசனம் செய்து தங்கள் விரதத்தை முடித்து கொள்வார்கள்.

 

மனிதனாய் பிறந்தவன் இவ்வுலகில் தோன்றி மறைந்து, மீண்டும் பிறந்து பிறவி பெருங்கடலை நீந்தி இறைவனடி சேர்வதென்பது நியதிகளில் ஒன்று. விஷ்ணு பகவானை வைகுண்ட ஏகாதசி அன்று உண்மையான பக்தியுடன் வேண்டுவோருக்கு பிறவி பிணி நீங்கி முக்தி கிடைப்பது நிச்சயம்.

 

மேலும் படிக்க 

 

கொடிய நோயை அகற்றும் யோகினி ஏகாதசி

 

நம் முன்னோரை கடையேற்றும் இந்திரா ஏகாதசி

 

நிர்ஜல ஏகாதசியின் தனித்த மகிமை

 

 

 

 

 

 

Share this:
Tags:

About sudha

[field_information]
 • Website
 • Google+
 • Rss
 • Pinterest
 • Instagram
 • LinkedIn
 • Vimeo
 • Youtube
 • Flickr
 • Email

  Leave a Reply

  CAPTCHA
  This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
  5 + 0 =
  Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

  சிறப்பு காணொளி

  வானிலை

  Chennai

  Today, மேய் 6, 2021
  Sunrise: 05:46
  Sunset: 18:25
  12:30-18:30

  Partly cloudy

  Partly cloudy
  34 °C / 93 °F

  Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK