வரலக்ஷ்மி விரதம் தென் இந்திய மாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று. தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் பெண்டிர் வரலக்ஷ்மி விரதத்தை பெரிதும் மகிழ்வுடனும் பக்தியுடனும் கொண்டாடுகிறார்கள்.
வரலக்ஷ்மி விரதம் அன்னை லக்ஷ்மியை குறித்து கொண்டாடுவது .ஆடி மாதம் வரும் பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுவது. இந்த விரதம் மிகவும் சக்தி வாய்ந்தது. ஏனெனில் இந்த விரதத்தை பரமசிவன் அன்னை பார்வதிக்கு குடும்ப வளத்திற்காக செய்ய வேண்டி பரிந்துரைத்தாராம்.
வரம் என்றால் கேட்ட வரம் எனப் பொருள். லக்ஷ்மி என்பவர் செல்வத்தை அள்ளி தரும் அன்னை. கேட்ட வரமும் செல்வமும் நல்குபவளே வரலக்ஷ்மி. லக்ஷ்மி தேவியின் அம்சம்.இந்த விரதத்தை பெண்கள் தங்கள் குடும்ப நலனுக்காக பேணுகிறார்கள். கணவர் மற்றும் குடும்பத்தினர் வாழ்வில் வளமுடன் வாழ வரலட்சுமியை வேண்டுகிறார்கள். விரதமிருந்து பூஜை செய்கிறார்கள்.
முன்பு ஒரு காலத்தில் மகத நாட்டில் குந்தினி என்ற நகரத்தில் சாருமதி என்று ஒரு பெண்ணிருந்தாள். அவள் தனது கணவனோடு இல்லறத்தை நல்லறமாக வாழ்ந்து வந்தாள். அவளுக்கு அவளது குடும்பத்தினரிடம் இருந்த அக்கறையை கண்ட அன்னை மகாலட்சுமி அவள் கனவில் தோன்றி வரலக்ஷ்மி விரதம் அனுஷ்டிக்க அனுக்ரகம் செய்தாள். இந்த விரதத்தை ஆடி மாதம் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை செய்ய வேண்டும் எனவும் கூறினாள். இதனால் அவளது குடும்பத்தில் வளம் பெருகும் என்றாள்.
சாருமதியும் தனது கனவினை குடும்பத்தினரிடம் கூற அவர்களும் தங்களால் இயன்ற ஒத்துழைப்பை ஈன்றனர். முடிந்த உதவிகளை செய்தனர்.ஊரில் இருந்த மற்ற பெண்களும் பூஜையில் கலந்து கொண்டு வரலட்சுமிக்கு இனிப்புகளை நெய்வேத்யமாக அளித்தார்கள்.
இந்த விரத பூஜையால் மனம் மகிழ்ந்த வரலக்ஷ்மி அன்னை சாருமதிக்கு எல்லா நலன்களையும் அருளினாள்.அவள் குடும்பமும் சுபிக்ஷமாக இருந்தது.
வரலக்ஷ்மி விரதத்திற்கு முந்தைய தினமே தேவையான பொருட்களை சேகரித்து வைக்கிறார்கள்.
வெள்ளிக்கிழமை அதி காலை எழுந்து பூஜை நடக்க வேண்டிய இடத்தை சுத்தம் செய்து கோலமிட வேண்டும்.
வரலக்ஷ்மி விரதத்தில் முக்கியமானது கலசமாகும். கலசத்தை அலங்கரிப்பது முக்கியமான ஒன்று. இது குடும்பத்திற்கு குடும்பம் மாறுபடுகிறது.
பொதுவாக கலசம் வெள்ளி, தங்கம் அல்லது பித்தளையால் செய்யப்பட்டதாக உள்ளது.
கலசத்தின் உள்ளே அரிசி, பூ,வெற்றிலை,பாக்கு, வாழைப்பழம், எலுமிச்சம் பழம், தங்கம், வெள்ளி (சிறிய ஆபரணம் அல்லது காசு) ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.
பின்னர் ஒரு பித்தளை தட்டில் அரிசி பரப்பி அதன் மேல் கலசத்தை வைக்க வேண்டும்.வாழை இலை மேல் வைப்போரும் உண்டு.
கலசத்தின் வாயில் மாவிலை நிரப்பி அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி வைக்க வேண்டும். தேங்காயின் மீது வரலக்ஷ்மி முகம் வெள்ளியால் செய்யப்பட்டது இருந்தால் அதை வைத்து கட்ட வேண்டும். அல்லது வரலக்ஷ்மியின் முகத்தை வரைய வேண்டும்.
இந்த கலசத்தில் வரலட்சுமி அம்மன் வந்து இருப்பதாக ஐதீகம்.
பெண்டிர் வரலட்சுமியை வீட்டின் வாசலில் இருந்து அழைத்து பூஜையை துவங்குகிறார்கள்.
சிலர் கலசத்திற்கு பின்னால் கண்ணாடியை வைக்கிறார்கள்.
கொழுக்கட்டை,சுண்டல் ஆகியவை நெய்வேத்யமாக படைக்கப்படுகின்றன.
அருகிலிருக்கும் பெண்களை அழைத்து மஞ்சள் குங்குமம்,வெற்றிலை பாக்கு அளித்து வரலக்ஷ்மி பூஜையை கொண்டாடுகிறார்கள்.
வரலக்ஷ்மி விரதமிருந்தால் பெண்டிருக்கு மட்டுமன்றி குடும்பத்தினருக்கும் ஆரோக்கியம், ஐஸ்வர்யம், வளம் பெருகுகிறது.
சில பெண்டிர் புத்திர சௌபாக்கியம் வேண்டி வரலக்ஷ்மி பூஜை செய்கிறார்கள்.
வரலக்ஷ்மி பூஜை செய்தால் அஷ்ட லக்ஷ்மிகளையும் பூஜை செய்த பலன் கிடைக்கிறது. ஆதிலக்ஷ்மி, கஜலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, வீர லக்ஷ்மி, தனலக்ஷ்மி, தான்யலக்ஷ்மி , சந்தானலக்ஷ்மி, ஐஸ்வர்யலக்ஷ்மி அஷ்ட லக்ஷ்மிகள் ஆவார்கள். இவர்களின் நல்லாசி வரலக்ஷ்மி விரத பூஜை வாயிலாக கிட்டுகிறது. அந்தந்த பலன்களும் ஏற்படுகின்றன.
வரலக்ஷ்மி பூஜை செய்து லக்ஷ்மி தேவியின் அருள் பெறுங்கள். குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்கு காரணமாகுங்கள்..
எங்கள் வைதீக மையம் மூலம் தங்களுக்குத் தேவையான பூஜை, கணபதி ஹோமம், ஆயுஷ ஹோமம், நவக்ராஹா ஹோமம் செய்வதற்கு தேவையான வாத்யார்கள் ஏற்பாடு செய்து தரப்படும்.
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply