ஜனவரி 12, 2018 06:10 முப

மகர சங்கராந்தி சிறப்புகள்

 

மகர சங்கராந்தி இந்து மதத்தவர் கொண்டாடும் முக்கியமான பண்டிகையாகும்.இது தக்ஷிணாயன காலம் முடிந்து உத்தராயண காலம் ஆரம்பிப்பதைக் குறிக்கிறது. தமிழ் மாதமாம் தை மாதப் பிறப்பு மகர சங்கராந்தியாகக் கொண்டாடப்படுகிறது.

 

2018ம் ஆண்டு, மகர சங்கராந்தி ஜனவரி 14 ம் தேதி வருகிறது.

 

மகர சங்கராந்தி என்றால் என்ன?

 

மகரம் 12 ராசிகளில் ஒன்று. சங்கராந்தி என்றால் ‘நகருதல்’ எனப் பொருள். சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு நகரும் நாளை மகர சங்கராந்தி எனக்கூறுகிறோம்.

 

 

இந்த நாளிலிருந்து சூரியன் வடக்கு நோக்கி நகர்கிறார். இது குளிர் காலம் கழிந்து கோடை தொடங்குவதை குறிக்கிறது. இந்த நாளில் பகலும், இரவும் சரிசமமான நேரத்தை கொண்டு இருக்கும்.

 

மகர சங்கராந்தியின் தனிப்பட்ட பெருமைகள் 

 

makar sankranti

மகர சங்கராந்தி ஒவ்வொரு வருடமும் ஒரே தினத்தில் அமையும் தன்மை வாய்ந்தது.

 

ஜனவரி 14 அன்று நாம் ஒவ்வொரு வருடமும் மகர சங்கராந்தியை கொண்டாடுகிறோம்.

 

இந்த நாளிலிருந்து வசந்த நவராத்திரி ஆரம்பமாகிறது.

 

மகர சங்கராந்தி மற்ற திருநாட்கள் போல் அல்லாமல் சூரியனை மேற்கொண்டு அமைந்த நன்னாளாக அமைகிறது.

 

மகரசங்கராந்தி அன்று சூரியன் தனது மகன் வீடான மகரத்தில் பிரவேசிக்கிறார். சனியும் சூரியனும் பகைமை உடையவர் என்பது ஜோதிட உண்மை.

 

தன் மகனாம் சனியின் வீட்டில் பிரவேசிக்கும் சூரியன் நமக்கு பகைமை உணர்வை ஒழிக்க வேண்டும் என்னும் நல்லுண்மையை உணர்த்துகிறார்.

 

மகர சங்கராந்தியின் புராணப் பின்னணி 

 

Makara sankranti

மகாபாரத்தில் பீஷ்மர் தனது சாவை தான் வேண்டும் நேரத்தில் பெறும் வரம்  பெற்றவர்.

 

அம்பு படுக்கையில் மரணத்தை எதிர்நோக்கிய நேரத்தில் உத்தராயண காலத்திற்காக காத்திருந்து மகர சங்கராந்தியை எதிர் நோக்கினார் என்பது புராணம் கூறும் செய்தி.

 

பகீரதன் தவமிருந்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்த செய்தி நாம் அறிந்ததே. அவர் கடுமையான தவம் புரிந்து தனது 60,000 முன்னோர்களை கொடிய சாபத்தின் பிடியிலிருந்து மீட்க கங்கையை பூமிக்குக் கொண்டு வந்தார்.

 

இது கபில முனிவரின் ஆசிரமத்திற்கு அருகில் நடந்தது. இன்றும் இந்த நிகழ்ச்சியை நினைவு கோரும் வகையில், மகர சங்கராந்தி அன்று  வங்காளத்தில் கங்கா சாகர் மேளா கொண்டாடப்படுகிறது.

 

மகர சங்கராந்தி அன்று தான் பகவான் விஷ்ணு அசுரர்களின் கொட்டத்தை அடக்கி அவர்களின் தலைகளை மந்திர மலையின் அடியில் புதைத்தார்.

 

பல வித பெயர்கள் கொண்ட மகர சங்கராந்தி 

 

குஜராத்தில் ‘உத்தராயன்’ என  அழைக்கப்படும் இந்த நாள்ப ட்டங்களை வானில் செலுத்தி விளையாடும் நாளாகும்

 

கிச்சேரி’ என உத்தர பிரதேசத்தில் அழைக்கப்படும் இந்நாள்  விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் இந்த நாளில் கங்கையின் புனிதநீரில் நீராடுவதை பெரும்பாக்கியமாக கருதுகிறார்கள்.

 

Makar Sankranti

பஞ்சாபில் இந்த நாள் லோஹரி எனஅழைக்கப்படுகிறது.

 

வங்காளத்தில் மகர சங்கராந்தி அன்று ‘கங்கா சாகர் மேளா’ கொண்டாடப்படுகிறது.

 

அசாமில்  இதனை போகலி பீகு என அழைக்கிறார்கள்.

 

தமிழரும், தெலுங்கு இனத்தவரும் இதை அறுவடை திருநாளாக கொண்டாடுகிறார்கள்.

 

 

மகர சங்கராந்தியை ஒட்டிக் கொண்டாடப்படும் விழாக்கள் 

 

கும்பமேளா 12 வருடங்களுக்கு ஒரு முறை பிரயாகை,  நாசிக்,  உஜ்ஜையனி மற்றும் ஹரித்வாரில் கொண்டாடப்படுகிறது.

 

பிரயாகையில் ஒவ்வொரு வருடமும் கும்ப மேளா சிறிய அளவில் மக மேளாகவாக கொண்டாடப்படுகிறது.

 

கங்கா சாகர் மேளா வங்காளத்தில்  கொண்டாடப்படுகிறது.

 

துசு மேளா என்பது ஜார்கண்டில் கொண்டாடப்படுவது ஆகும்.

 

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்டிகை

 

வட இந்தியர் பல நிறமுடைய அல்வா, எள்ளுருண்டை போன்ற இனிப்புகளை உண்கின்றனர். வானில் பட்டம் விடுகின்றனர். இனிப்புகள் உண்ணுதல், பட்டம் விடுதல் ஆகியை உடலுக்கு உஷ்ணம் தரும். இதனால் உடலுக்கு சுறுசுறுப்பு வரும். உடலில் சக்தி அதிகரிக்கும்

 

தைத் திருநாள்

 

அன்னை பூமிக்கும்,  சூரியக்கடவுளுக்கும் நன்றி கூறும் முகமாக மகர சங்கராந்தியை தமிழர் கொண்டாடுகிறார்கள். உழவர் திருநாளாம் தை பொங்கலில், மாடு கன்றுகளில் இருந்து எல்லாவற்றிற்கும் நன்றி செலுத்தும் முகமாக இந்நாள் அமைகிறது.

 

புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசியில்  பொங்கல் செய்து, அதனை சூரியனுக்குப் படைத்து, அவருக்கு நன்றி கூறும் நன்னாள் இது,

 

அறுவடைத் திருநாள்

 

ஆந்திரபிரதேசத்திலும்,  கர்நாடகத்திலும் அறுவடைத் திருநாளாக இருக்கும் மகரசங்கராந்தி கேரளத்தில் சபரி மலை தரிசனத்திற்கு உகந்ததாக இருக்கிறது.

 

இவ்வாறு மகர சங்கராந்தி எல்லோராலும் கொண்டாடப்படும் சிறந்த பண்டிகையாகத் திகழ்கிறது.

 

 

 

 

 

 

 

 

 

Share this:
Tags:

About sudha

[field_information]
 • Website
 • Google+
 • Rss
 • Pinterest
 • Instagram
 • LinkedIn
 • Vimeo
 • Youtube
 • Flickr
 • Email

  Leave a Reply

  CAPTCHA
  This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
  3 + 5 =
  Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

  சிறப்பு காணொளி

  வானிலை

  Chennai

  Today, அக்டோபர் 22, 2020
  Sunrise: 06:00
  Sunset: 17:46
  08:30-12:30

  Cloudy

  Cloudy
  27 °C / 80 °F

  Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK