ஜனவரி 16, 2018 01:15 பிப

தை மாதத்தின் சிறப்புகள்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஆன்றோர் கூறிய வாக்கு.தை மாதம் என்றாலே சுப நிகழ்ச்சிகள்  ஆரம்பமாகும் நேரம் என்பது நாம் அறிந்ததே. 

 

ஒவ்வொரு வருடமும் தை மாதம் ஜனவரி 14ம் தேதி அன்று ஆரம்பமாகிறது. சில வருடங்களில்,இது ஜனவரி 15ம் தேதியாக இருக்கும்.

 

தை மாதத்தின்  முக்கிய நிகழ்ச்சிகள்

 

Thai Month events 2018

மகர சங்கராந்தி

 

மகர சங்கராந்தி இந்து மதத்தவர் கொண்டாடும் முக்கியமான பண்டிகையாகும்.இது தக்ஷிணாயன காலம் முடிந்து உத்தராயண காலம் ஆரம்பிப்பதைக் குறிக்கிறது..2018ம் ஆண்டு,மகர சங்கராந்தி ஜனவரி 14 ம் தேதி வருகிறது.

 

சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு நகரும் நாளை மகர சங்கராந்தி எனக் கூறுகிறோம். இந்த நாளிலிருந்து சூரியன் வடக்கு நோக்கி நகர்கிறார். இது குளிர் காலம் கழிந்து கோடை தொடங்குவதை குறிக்கிறது.

 

தைப் பொங்கல்

 

தைப் பொங்கல் நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படும் தமிழர் திருநாளாகும்.

 

போகி(13-1-2018)

 

போகி அன்று பழையவற்றைக் களைந்து,புதியவற்றை புகுத்துவது வழக்கம்.மனைகளில் உள்ள பழைய பொருட்களை எரித்து போகி கொண்டாடுகிறோம்.

 

தைப் பொங்கல் (14-1-2018)

 

அன்னை பூமிக்கும், சூரியக் கடவுளுக்கும் நன்றி கூறும் முகமாக மகர சங்கராந்தியை தமிழர் கொண்டாடுகிறார்கள். புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசியில்  பொங்கல் செய்து,அதனை சூரியனுக்குப் படைத்து, அவருக்கு நன்றி கூறும் நன்னாள் இது,

 

மாட்டுப் பொங்கல் (15-1-2018)

 

உழவர்களின் நண்பர்களாகிய  மாடு கன்றுகளுக்கு நன்றி செலுத்தும்  விழாவே மாட்டுப் பொங்கல்.இந்த நாளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டு மிகவும் பிரசித்தி பெற்றது.

 

காணுப் பொங்கல்(16-1-2018)

 

எல்லோரும் குடும்பத்துடனும்,உறவினர் மற்றும் நண்பர்களுடனும்  கேளிக்கைகளில் ஈடுபடும் நாள் இது.கடற்கரை போன்ற இடங்களுக்குச் சென்று மகிழ்வது வழக்கம்.

 

தை அமாவாசை (16-1- 2018)

 

தை மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் முக்கியம் வாய்ந்தது.இதுஉத்தராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை ஆகும். சூரியனின் சக்தி அபரிமிதமாக இருக்கும் இந்த தை அமாவாசையில் நாம் நம் முன்னோருக்குத்  தர்ப்பணம் செய்தால் நமது முந்தைய வினைகள் தீரும். இந்த வருடம்,தை அமாவாசை ஜனவரி 16ம் தேதி வருகிறது.

 

வசந்த் பஞ்சமி (20-1-2018)

 

தை மாதத்தில் வரும் வளர் பிறை பஞ்சமி திதி அன்று வசந்த் பஞ்சமி கொண்டாடுவது வழக்கம். வசந்த் பஞ்சமி அன்னை சரஸ்வதியின் பிறந்ததினமாகவும் கொண்டாடப்படுகிறது. வசந்த ருதுவின் ஆரம்பத்தைகொண்டாடும் வகையிலும் அமைகிறது. ஹோலி கொண்டாட்டத்தின்ஆரம்பத்தையும் குறிக்கிறது.இந்த  வருடம் வசந்த் பஞ்சமி ஜனவரி மாதம் 20ம்தேதி வருகிறது.

 

ரதசப்தமி (24-1-2018)

 

தை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் சப்தமி திதியை நாம் ரதசப்தமி என கூறுகிறோம்.மகர சங்கராந்தி அன்று தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு கடக்கும் சூரியன் தனது வடக்கு திசை நோக்கிய பயணத்தை துவக்குகிறார்.ரதம் என்றால் தேர். இங்கு அது சூரியனின் தேரைக் குறிக்கும். சப்தமி என்பது ஏழாவது தினம்.சூரியன் தன் தேர்க்காலை வடக்கு  நோக்கி நகர்த்தி கொண்டு செல்வதைக் குறிக்கும் விதமாக ரதசப்தமி அமைந்துள்ளது.இந்த வருடம்,ரதசப்தமி ஜனவரி 24 அன்று வருகிறது.

 

பீஷ்மாஷ்டமி (25-1-2018)

 

பீஷ்மாஷ்டமி ஜனவரி 25, 2018 அன்று வருகிறது.இது ரதசப்தமிக்கு அடுத்த நாளாகும்.தை மாதம் சுக்ல பக்ஷத்தில் வரும் அஷ்டமி பீஷ்மாஷ்டமியாக அனுசரிக்கப்படுகிறது.

 

பீஷ்மர் மகாபாரத்தின் பெரிதும் சிறப்பு மிக்க வீரர். எப்போது சூரியன் தனது பயணத்தை வடக்கு முகமாக திருப்புகிறாரோ, அது வரை தனது சாவை தள்ளிவைத்தார்.பின்னர் தைமாத வளர்பிறை அஷ்டமி அன்று உயிர் துறந்தார். அந்த நாளே பீஷ்மாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.

 

தைப் பூசம் (3௦-1-2018)

 

தைப்பூசம் முருக வேளுக்கு மிகவும் உகந்த நாள்.தைப்பூசம் தை மாதத்தில் பௌர்ணமி அன்று பூச நட்சத்திரம் வரும்வேளையில் கொண்டாடப்படுகிறது. ‘தைப்பூசம்’ என்ற பெயரிலேயே தை மாதமும், பூச நக்ஷத்திரமும்அடங்கி உள்ளன.இந்த வருடம், தைப்பூசம் ஜனவரி 31ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.

 

சந்திர கிரகணம் (31-1-2018)  

 

2018 ம் ஆண்டு, ஜனவரி 31ம் தேதி அன்று சந்திர கிரஹணம் வருகிறது. இந்த கிரகணம் மாலை 5.16   க்கு ஆரம்பித்து இரவு  8.40 க்கு முடிகிறது.

 

 தை மாதம் பல சிறப்புகளை உள்ளடக்கியது. மகர சங்கராந்தியிலிருந்து ரதசப்தமி வரை எல்லா நிகழ்ச்சிகளும் தனிச் சிறப்புடையவை. இந்த எல்லா நிகழ்வுகளையும் நாம் நல்ல முறையில் அனுசரித்து, இறைவனின் திருவருள் பெறுவோமாக!

 

 

 

 

 

Share this:
Tags:

About sudha

[field_information]
  • Website
  • Google+
  • Rss
  • Pinterest
  • Instagram
  • LinkedIn
  • Vimeo
  • Youtube
  • Flickr
  • Email

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    5 + 4 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

    சிறப்பு காணொளி

    வானிலை

    Chennai

    Today, ஆகஸ்ட் 3, 2021
    Sunrise: 05:55
    Sunset: 18:35
    06:30-12:30

    Partly cloudy

    Partly cloudy
    28 °C / 82 °F

    Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK