ஜனவரி 08, 2018 01:06 பிப

சத்தில ஏகாதசி

சத்தில ஏகாதசி  மார்கழி மாதத்தில் தேய்பிறை ஏகாதசி அன்று வருகிறது.இது ஜனவரி மாதம் 12ம் தேதி அன்று வருகிறது.

 

சத்தில ஏகாதசி எனப் பெயர் வரக் காரணம்

 

‘திலம்’ என்றால் ‘எள்ளு’ எனப் பொருள். சத்திலம் என்றால் ஆறு எள்ளு எனப் பொருள்.சத்தில ஏகாதசி அன்று ஆறு வகையாக எள்ளினைப் பயன்படுத்தி  நாம் ஸ்ரீஹரியின்  அருளினைப் பெறலாம்.

 

அந்த ஆறு வகை என்ன?

 

Shatṯila Ekadashi

1. நாம் குளிக்கும் நீரில் எள்ளினைக் கலந்து கொள்ளுதல்.

 

2. எள்ளினை அரைத்து அந்தக் கலவையை உடலில் பூசிக் கொள்ளுதல்.

 

3. எள்ளினை ஹோமத் தீயில் அர்ப்பித்தல்.

 

4. இறந்த முன்னோருக்கு எள் கலந்த நீர் கொண்டு மரியாதை செய்தல்.

 

5. எள்ளினால் ஆன உணவை உண்ணுதல்.

 

6. எள்ளைத் தானமாகத் தருதல்.

 

இப்படி சத்தில ஏகாதசி அன்று எள்ளை உபயோகப்படுத்தினால்,நமக்கு விஷ்ணுவின் அருள் கிட்டும். முக்தி கிட்டும். இந்த விஷயத்தை ஸ்ரீ புலஸ்ட்ய முனி தல்ப்ய முனியிடம் சொன்னார். 

 

சத்தில ஏகாதசி விரதக் கதை 

 

Shatṯila Ekadashi

 

சத்தில ஏகாதசி விரத கதையை பகவான் கிருஷ்ணர் நாரத முனிவருக்குக் கூறினார்.

 

முன்பொரு காலத்தில்,ஒரு வயதான பெண்மணி தயாள குணமுடையவளாக இருந்தாள். தன்னை அண்டி வந்தவர்களுக்கு அனைத்துப்  பொருட்களும் தானமாகக் கொடுத்தாள். ஆனால் அவள் உணவை மட்டும் தானமாக அளிக்கவில்லை. அவள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தை. ஸ்ரீ கிருஷ்ணரை மிகவும் சிரத்தையுடன் பூஜித்து வந்தாள்.  

 

கிருஷ்ணர் அந்த வயதான மூதாட்டிக்கு அன்னதானத்தின் மகிமையை சுட்டிக் காட்ட விரும்பினார். எனவே ஒரு பிச்சைக்காரன் போல் வேஷம் பூண்டு,  அவள் வீட்டிற்குச் சென்று,உணவை பிச்சையாகக் கேட்டார். எரிச்சலடைந்த அந்த பெண்மணி ஒரு களிமண் உருண்டையை அவரது பிச்சைப் பாத்திரத்தில் வீசி எறிந்தாள்.

 

உள்ளே சென்று தனக்கான உணவை உண்ண முயன்ற போது, அவள் சமைத்து வைத்த உணவு களிமண்ணாக மாறியிருக்கக் கண்டாள். அன்று முதல் அந்த மூதாட்டியால் உணவை உண்ண முடியவில்லை.அவளுடைய உணவெல்லாம்  களிமண்ணாகவே இருந்தது.அவள் உடல் நலிவுற்றாள்.

 

ஒரு நாள் ஸ்ரீ கிருஷ்ணர் அந்த மூதாட்டியின் கனவில் தோன்றினார். அவளுக்கு அன்னதானத்தின் மகிமையை எடுத்து சொன்னார்அவள் அன்னதானம் அளிக்காததாலேயே அவள் உணவு களிமண்ணாக மாறியது என உரைத்தார். பகவான் அந்த மூதாட்டியை சத்தில ஏகாதசி விரதமிருக்குமாறு பணித்தார். மூதாட்டியும் அவ்வாறே சத்தில ஏகாதசி விரதமிருந்து உணவு உண்ணும் பேறு பெற்றாள். தனது பாபங்கள் நீங்கப் பெற்றாள். 

 

சத்தில ஏகாதசி விரத பலன்கள்

 

சத்தில ஏகாதசி விரதமிருந்தால் ஒருவரின் பாபம் தொலையும்.

 

எள் கொண்டு முன்னோரை வணங்குவதால் அவர்களின் நல்லாசி கிட்டும்.

 

எள்ளை தானம் செய்வதால்  ஆன்மிக பலம் கிட்டும்.

 

கோபம், பொறாமை போன்ற தீய எண்ணங்கள் மறையும்.

 

வாழ்வில் பொருளாதார வளமும்,ஆன்மீக வளமும் பெருகும்.

 

சத்தில ஏகாதசி விரதமிருப்பவர்கள் தனது ஆன்மா தூய்மை அடையப் பெற்று,இறுதியில் முக்தி பெறுவார்கள்.

 

சத்தில ஏகாதசி விரதம் அனுசரிக்கும் முறை

 

சத்தில ஏகாதசி விரதம் மற்ற ஏகாதசி விரதங்களை அனுசரிப்பது போலவேதான்.  இந்த நாளில் அரிசியும்,தானியங்களும் உண்ணுவதில்லை.முழு நாளும் விரதமிருக்க முடியாதவர்கள் பாலும்,பழமும் உணவாக எடுத்துக் கொள்வது வழக்கம்.இரவில் கண் விழித்து, ஹரியின் தியானத்தில் இருப்பது வழக்கம்.

 

சத்தில ஏகாதசி விரதமிருந்து ஸ்ரீ ஹரியின் கடாக்ஷத்தைப் பெறுவோமாக!    

 

மேலும் படிக்க

 

 

கொடிய நோயை அகற்றும் யோகினி ஏகாதசி

 

 

நம் முன்னோரை கடையேற்றும் இந்திரா ஏகாதசி

 

 

நிர்ஜல ஏகாதசியின் தனித்த மகிமை

 

 

 

 

 

 

 

 

 

Share this:
Tags:

About sudha

[field_information]
  • Website
  • Google+
  • Rss
  • Pinterest
  • Instagram
  • LinkedIn
  • Vimeo
  • Youtube
  • Flickr
  • Email

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    4 + 2 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

    சிறப்பு காணொளி

    வானிலை

    Chennai

    Today, செப்டம்பர் 29, 2021
    Sunrise: 05:58
    Sunset: 18:00
    06:30-12:30

    Partly cloudy

    Partly cloudy
    26 °C / 78 °F

    Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK