சங்கடஹர சதுர்த்தி ஒவ்வொரு மாதமும் தேய் பிறை சதுர்த்தி திதி அன்று அனுசரிக்கப்படுகிறது. பிள்ளையாருக்கு விரதமிருந்து சந்திரனை கண்டபிறகு பிள்ளையார் பூஜை செய்து விரதம் முறிக்கும் நோன்பு இது.
சரி, பிள்ளையார் என்றவுடனே நமக்கு தோன்றுவது என்ன? இந்த விரதம் கட்டாயம் இன்னல்களை முறியடிக்க உதவும் விரதமே என்பதே. ஆம்,சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் நாம் நம் வாழ்க்கையில்படும் கஷ்டங்களில் இருந்து விடுபடலாம், சோதனைகளை தாண்டி வெற்றி நடை போடலாம், நிறைந்த இறை அருள் பெறலாம்.
‘சங்கட’என்றால் கஷ்டம் மற்றும் ‘ஹர’ என்றால் போக்குதல் என்று பொருள். சங்கடங்களை போக்கும் விக்ன விநாயக மூர்த்தியின் தாள் பணிந்து விரதமிருந்தால் நமக்கு நன்மைகள் பெருகும் என்பதே இந்த விரத பலன்.
அதிகாலை எழுந்து, நீராடி பூஜை அறையில் பிள்ளையார் படம் அல்லது விக்ரகத்தை வைத்து அலங்கரித்து பிள்ளையார் ஸ்லோகங்களை சொல்லி விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.
அவரின் நாமங்களை சொல்லி தொழுதால் விசேஷம். ஸ்லோகம் சொல்லி பழகியவர்கள், சற்றே கடிதான ஸ்லோகங்களை சொல்லலாம். கணேஷ பஞ்சரத்னம் சொல்லலாம்.
முழு விரதம் இருப்பது உசிதம். காலையிலிருந்து மாலை சந்திர உதயம் கண்டு பின் பிள்ளையார் பூஜை செய்து விரதத்தை முடிப்பது நல்லது. முடியாதவர்கள் பழம்,பால் மற்றும் ஜவ்வரசி உப்புமா ஆகியவற்றை சாப்பிடலாம்.
சங்கட ஹர சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் சந்திர உதயத்தை மாலையில் கண்ட பின் பூஜை செய்ய வேண்டும். ஒரு வேளை அவர்களால் சந்திரனை நேரடியாக காண முடியவில்லை என்றால் பஞ்சாங்கத்தில் அன்றைய தினம் எப்போது சந்திர உதயம் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளதோ அந்த நேரத்தில் பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பொதுவாக ஏழு மணி அளவில் பூஜையை ஆரம்பிப்பது நல்லது.
ஓம் கஜானனாய நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் விக்னாராஜாய நம:
ஓம் வினாயகாய நம:
ஓம் த்த்வெமாதுராய நம:
ஓம் த்விமுகாய நம:
ஓம் ப்ரமுகாய நம:
ஓம் ஸுமுகாய நம:
ஓம் க்றுதினே நம:
ஓம் ஸுப்ரதீபாய நம: (10)
ஓம் ஸுக னிதயே நம:
ஓம் ஸுராத்யக்ஷாய நம:
ஓம் ஸுராரிக்னாய நம:
ஓம் மஹாகணபதயே நம:
ஓம் மான்யாய நம:
ஓம் மஹா காலாய நம:
ஓம் மஹா பலாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் லம்ப ஜடராய நம:
ஓம் ஹ்ரஸ்வ க்ரீவாய நம: (20)
ஓம் மஹோதராய நம:
ஓம் மதோத்கடாய நம:
ஓம் மஹாவீராய நம:
ஓம் மம்த்ரிணே நம:
ஓம் மம்கள ஸ்வராய நம:
ஓம் ப்ரமதாய நம:
ஓம் ப்ரதமாய நம:
ஓம் ப்ராஜ்ஞாய நம:
ஓம் விக்னகர்த்ரே நம:
ஓம் விக்னஹம்த்ரே நம:(30)
ஓம் விஶ்வ நேத்ரே நம:
ஓம் விராட்பதயே நம:
ஓம் ஶ்ரீபதயே நம:
ஓம் வாக்பதயே நம:
ஓம் ஶ்றும்காரிணே நம:
ஓம் ஆஶ்ரித வத்ஸலாய நம:
ஓம் ஶிவப்ரியாய நம:
ஓம் ஶீக்ரகாரிணே நம:
ஓம் ஶாஶ்வதாய நம:
ஓம் பலாய நம: (40)
ஓம் பலோத்திதாய நம:
ஓம் பவாத்மஜாய நம:
ஓம் புராண புருஷாய நம:
ஓம் பூஷ்ணே நம:
ஓம் புஷ்கரோத்ஷிப்த வாரிணே நம:
ஓம் அக்ரகண்யாய நம:
ஓம் அக்ரபூஜ்யாய நம:
ஓம் அக்ரகாமினே நம:
ஓம் மம்த்ரக்றுதே நம:
ஓம் சாமீகர ப்ரபாய நம: (50)
ஓம் ஸர்வாய நம:
ஓம் ஸர்வோபாஸ்யாய நம:
ஓம் ஸர்வ கர்த்ரே நம:
ஓம் ஸர்வனேத்ரே நம:
ஓம் ஸர்வஸித்தி ப்ரதாய நம:
ஓம் ஸர்வ ஸித்தயே நம:
ஓம் பம்சஹஸ்தாய நம:
ஓம் பார்வதீனம்தனாய நம:
ஓம் ப்ரபவே நம:
ஓம் குமார குரவே நம: (60)
ஓம் அக்ஷோப்யாய நம:
ஓம் கும்ஜராஸுர பம்ஜனாய நம:
ஓம் ப்ரமோதாய நம:
ஓம் மோதகப்ரியாய நம:
ஓம் காம்திமதே நம:
ஓம் த்றுதிமதே நம:
ஓம் காமினே நம:
ஓம் கபித்தவன ப்ரியாய நம:
ஓம் ப்ரஹ்மசாரிணே நம:
ஓம் ப்ரஹ்மரூபிணே நம: (70)
ஓம் ப்ரஹ்மவித்யாதி தானபுவே நம:
ஓம் ஜிஷ்ணவே நம:
ஓம் விஷ்ணுப்ரியாய நம:
ஓம் பக்த ஜீவிதாய நம:
ஓம் ஜித மன்மதாய நம:
ஓம் ஐஶ்வர்ய காரணாய நம:
ஓம் ஜ்யாயஸே நம:
ஓம் யக்ஷகின்னெர ஸேவிதாய நம:
ஓம் கம்கா ஸுதாய நம:
ஓம் கணாதீஶாய நம: (80)
ஓம் கம்பீர னினதாய நம:
ஓம் வடவே நம:
ஓம் அபீஷ்ட வரதாயினே நம:
ஓம் ஜ்யோதிஷே நம:
ஓம் பக்த னிதயே நம:
ஓம் பாவ கம்யாய நம:
ஓம் மம்கள ப்ரதாய நம:
ஓம் அவ்வக்தாய நம:
ஓம் அப்ராக்றுத பராக்ரமாய நம:
ஓம் ஸத்ய தர்மிணே நம: (90)
ஓம் ஸகயே நம:
ஓம் ஸரஸாம்பு னிதயே நம:
ஓம் மஹேஶாய நம:
ஓம் திவ்யாம்காய நம:
ஓம் மணிகிம்கிணீ மேகாலாய நம:
ஓம் ஸமஸ்த தேவதா மூர்தயே நம:
ஓம் ஸஹிஷ்ணவே நம:
ஓம் ஸததோத்திதாய நம:
ஓம் விகாத காரிணே நம:
ஓம் விஶ்வக்த்றுஶே நம: (100)
ஓம் விஶ்வரக்ஷாக்றுதே நம:
ஓம் கள்யாண குரவே நம:
ஓம் உன்மத்த வேஷாய நம:
ஓம் அபராஜிதே நம:
ஓம் ஸமஸ்த ஜகதாதாராய நம:
ஓம் ஸர்த்வெஶ்வர்ய ப்ரதாய நம:
ஓம் ஆக்ராம்த சித சித்ப்ரபவே நம:
ஓம் ஶ்ரீ விக்னேஶ்வராய நம: (108)
பிள்ளையாருக்கு மூன்று என்ற எண் மிகவும் பிடித்த ஒன்று. அவரது நாமத்தையோ, ஸ்லோகத்தையோ மூன்று முறை ஜபித்தால் அவர் மனம் குளிர்ந்து நாம் வேண்டுவதை அருளுவார் என்பது நிச்சயம். கணேஷ அஷ்டகம், சங்கடநாஷன ஸ்லோகம், கணேஷ அதர்வஷீர்ச ஸ்லோகம் ஆகியவற்றை சொல்லலாம்.
பொதுவாக, பால், பழம், பூக்களை கொண்டு பிள்ளையாரை ஆராதிப்பது வழக்கம். இந்த நாளில் கொழுக்கட்டையோ, மோதகமோ செய்து நைவேத்யமாகப் படைப்பது விசேஷமான ஒன்று. பிள்ளையாருக்கு இவை இரண்டும் மிகவும் பிடித்த இனிப்பு வகைகள் என்பது நாம் அறிந்த ஒன்று. அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்தால் மிகவும் விசேஷம். பொதுவாக மஞ்சளில் பிள்ளையார் பிடித்து ஆராதிப்பார்கள்.
பிள்ளையாரின் அருள் இருந்தால் எந்தவித தடைக்கல்லையும் தாண்டி விடலாம். இதற்கு சங்கடஹர சதுர்த்தி விரதம் ஒரு எடுத்துக்காட்டு. இந்த விரதம் இருந்து வாழ்வில் வளம் பெறுவோமாக. பிள்ளையாரின் கருணைக்கு பாத்திரமாவோமாக.
மேலும் படிக்க
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply