ஜூலை 08, 2018 09:37 முப

கொடிய நோயை அகற்றும் யோகினி ஏகாதசி!

யோகினி ஏகாதசி ஆனி  மாதத் தேய்பிறையில் வரும் ஏகாதசி ஆகும். நோய்களிலிருந்து விடுவிக்கும் சக்தி வாய்ந்ததாகும். தொழுநோய் போன்ற கடுமையான நோயின் தாக்கத்திலிருந்து,பக்தர்களைக் காக்கும் சக்தி உடையதாகும்.

 

யோகினி ஏகாதசி 2018 ஜூலை 9, திங்கட்கிழமை வருகிறது. 

 

யோகினி ஏகாதசியைப் பற்றி, பிரம்மவைவத்ர புராணத்தில்,கிருஷ்ண பகவான் தருமருக்கு எடுத்துச் சொல்கிறார்

 

யோகினி ஏகாதசி கதை

 

யோகினி ஏகாதசி குபேரனின் ராஜ்யத்தில் பணி புரிந்த ஒரு யக்ஷனைப் பற்றியது.

 

Yogini Ekadashi 2018

அழகாபுரியை ஆண்டவர் குபேரன். தேவர்களின் பொக்கிஷங்களைக் காக்கும் யக்ஷர்;  சிவனின் பக்தர்; தினந்தோறும், சிவ பூஜை செய்பவர். அவரிடம்   ஹேமமாலி என்ற யக்ஷன் வேலை செய்து வந்தான். அவன், நாள்தோறும், சிவ பூஜைக்காக, மானசரோவர் ஏரியிலிருந்து, பூக்களைப்பறித்து வருவான்.இது அவனின் பணிகளில் ஒன்று.

 

ஹேமமாலிக்கு ஸ்வரூபவதி என்ற மனைவி இருந்தாள்; அழகு மிக்கவள்.அவளின் அழகில் மிகவும் ஈர்க்கப்பட்டவன் இந்த யக்ஷன்.

 

ஒரு நாள்,ஹேமமாலி, வழக்கம் போல், மானசரோவர் ஏரியில் பூக்களைப்பறித்துக் கொண்டு,அவற்றைச் சிவ பூஜைக்குக் கொண்டு செல்லாமல், தனது மனைவியிடம் சென்றான்; அவளின் அழகை அனுபவித்துக் கொண்டு, தனது  பணி மறந்தான்.

 

பூஜையில் இருந்த குபேரனுக்கு, சிவனுக்கு அர்ப்பிக்க மலர்கள் இல்லை. கோபம் கொண்ட அவர், ஒரு யக்ஷனை அழைத்து, காரணம் கண்டறியச் சொன்னார். ஹேமமாலி தனது மனைவியுடன்  சல்லாபித்திருந்ததை அறிந்த அவர், அவனைக் கொடிய தொழுநோய் தாக்கட்டும் எனச் சாபமிட்டார். அவன் மனைவியை விட்டுப் பிரிவான் எனவும் கூறினார்.

 

உடனே, அழகாபுரியிலிருந்து கீழே தள்ளப்பட்டு,ஹேமமாலி அடர்ந்த காட்டுக்கு அனுப்பப்பட்டான்; தொழுநோயால் அவதிப்பட்டான்; உணவுக்கும், நீருக்கும் காட்டில் அலைந்தான்.

 

ஒரு நாள், காட்டில், ஹேமமாலி மார்க்கண்டேய மகரிஷியைத் தரிசித்தான்; தனது நோய் காரணமாக, தொலைவிலிருந்தே அவரை வணங்கினான். மகரிஷி அவனின் பரிதாபத்திற்குரிய நிலை கண்டு,அதன் காரணம் வினவினார். அவர் உயிரினங்களிடம் அன்பு கொண்டவர்; சிறந்த ஞானி.

 

ஹேமமாலி மார்க்கண்டேயரிடம்  எதையும் ஒளிக்காமல் நடந்ததைக் கூறினான். அவனின் சத்திய வாக்கை மெச்சி, மகரிஷி அவனுக்கு இந்த நோயிலிருந்து உய்யும் வழி உரைத்தார்; யோகினி ஏகாதசி விரதமிருக்கச் சொன்னார்; அதன் வழி விரதமிருந்து, ஹேமமாலி தொழுநோயின் பிடியிலிருந்து விடுபட்டான்; மீண்டும் அழகாபுரி சென்று, தனது  மனைவியுடன் அன்பு வாழ்வு வாழ்ந்தான்; தனது அழகிய தோற்றமும் திரும்பக் கிடைக்கப் பெற்றான்.

 

யோகினி ஏகாதசி விரதப் பலன்கள்

 

யோகினி ஏகாதசி விரதமிருந்தால்,கொடிய நோய்களிருந்து விடுபடலாம்.

 

பாபச் சுமை இன்றி  வாழலாம்.

 

யோகினி ஏகாதசி விரதமிருப்பது எண்பத்து எட்டாயிரம் பிராமணர்களுக்கு போஜனம் அளித்த பலனைக்கொடுக்கும்.

 

யோகினி ஏகாதசி விரதமிருக்கும் முறை

 

யோகினி ஏகாதசி  விரதத்தை நாம் மற்ற ஏகாதசி விரதங்கள்  அனுசரிப்பதைப் போலவே அனுசரிக்க வேண்டும்.

 

முழுமையாக விரதமிருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் அருந்தலாம்.

 

அரிசி,கோதுமையால்  செய்த உணவை உண்ணக் கூடாது.

 

நாமும் யோகினி ஏகாதசி விரதமிருந்து, நோய் இல்லா வாழ்வை அடைந்து, மகாவிஷ்ணுவின் துதி பாடி, பரமபதத்தை அடைவோமே?

 

 

 

 

Share this:
Tags:

About sudha

[field_information]
 • Website
 • Google+
 • Rss
 • Pinterest
 • Instagram
 • LinkedIn
 • Vimeo
 • Youtube
 • Flickr
 • Email

  Leave a Reply

  CAPTCHA
  This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
  5 + 14 =
  Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

  சிறப்பு காணொளி

  வானிலை

  Chennai

  Today, பெப்ரவரி 20, 2019
  Sunrise: 06:29
  Sunset: 18:16
  02:30-06:30

  நியாயம்

  நியாயம்
  26 °C / 78 °F

  Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK