சத்யநாராயண கதை

 

சத்யநாராயண கதை-  ஸ்ரீமன் நாராயணனின் பெருமைகளை விளக்கும்  ஒன்று!

 

சத்யம் என்றால் உண்மை மேலும் நாராயணன் என்னும் பதம் பகவான் விஷ்ணுவை குறிக்கும். சத்யநாராயணன் உண்மை ஸ்வரூபமானவர் .அவரை வணங்கி பூஜை செய்வோருக்கு உரிய பலன் அருளுபவர்.

 

சத்யநாராயண கதையை கூறுவது இந்த பூஜையின் முக்கிய அம்சமாகும். சத்யநாராயண கதை பகவான் விஷ்ணுவை பூஜை செய்பவர்களுக்குக் கிடைக்கும் நற்பலன்களையும் , பூஜை செய்வதாக வேண்டிக்கொண்டு பின்னர் அதனை மறந்தோர்க்கு அமையும் சங்கடங்களையும் எடுத்துக் கூறுகிறது.

 

சத்யநாராயண கதை ஐந்து பாகங்களில் அமைந்துள்ளது.

 

முதல் பாகம்

 

சத்யநாராயண பூஜை முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட குறிப்பு ஸ்கந்த புராணத்தில் ரேவ காண்டத்தில் சொல்லப்பட்டதை குறிப்பிடுகிறது. அதில் நாரதர் பூமிக்கு வந்து மனிதர்கள் படும் அல்லல்களை கண்டு, மனம் துயருற்று ,பகவான் விஷ்ணுவிடம் சென்று தான் கண்டதை விவரித்ததைக் விவரிக்கிறது. விஷ்ணுவும் அதற்கு பதில் கூறும் போது, சத்யநாராயண பூஜையின் மகிமையை எடுத்துக் கூறி, அதை செய்யும் முறையினைச் சொல்லி உலக மக்கள் துயர் துடைக்க ஒரு வழி கூறினார். இப்படியாக சத்யநாராயண பூஜை செய்தவர் துன்பமின்றி வாழ்வார், வேண்டியது பெறுவார் என்பது நமக்கு முதல் பாகத்திலிருந்து தெரிய வருகிறது

.
இரண்டாம் பாகம்

 

பகவான் விஷ்ணுவே பிராமணர் உருவம் தரித்து ஒரு அந்தணர் வீடு சென்று அவருக்கு சத்யநாராயண பூஜையின் பெருமையை எடுத்து சொன்ன கதையை சொல்கிறது. அந்த அந்தணர் தன் வீட்டில் பூஜை செய்து பல வளங்கள் பெறுவதை கண்டறிந்த ஒரு விறகுவெட்டி தானும் அப்பூஜை செய்து பலன் அடைந்தான்.

 

மூன்றாம் பாகம்

 

ஒரு குழந்தை இல்லா வியாபாரியின் கதையைச் சொல்லுகிறது. குழந்தை இல்லாத ராஜா சத்யநாராயண பூஜை செய்வதைக் கண்ட வியாபாரி தானும் பூஜை செய்து ஒரு பெண் குழந்தை பெற்று, அவளுக்கு கலாவதி எனப் பெயரிட்டான். தான் சத்யநாராயண பூஜை செய்ய வேண்டிய தேதியை அவள் திருமணம் வரை தள்ளி வைத்தான். அவள் திருமணத்திற்குப் பிறகும் அவன் பூஜையை செய்யவில்லை. அவனின் இந்த அலட்சியத்திற்கு தண்டனை கொடுக்க கடவுள் தீர்மானித்தார். அவனையும் அவனது மருமகனையும் அரசனின் காவலர் செய்யாத திருட்டுக்கு குற்றம் சுமத்திக் கைது செய்தனர்.

 

வீட்டில் வறுமை. மகளும், மனைவியும் வழி தெரியாமல் தவித்தனர். ஒரு நாள், கலாவதி தெருவில் பிச்சைஎடுக்கச் செல்லும் போது, ஒரு வீட்டில் சத்யநாராயண பூஜை செய்வதைப் பார்த்தாள். வீடு வந்து தன் தாயிடம் சொல்ல அவளும் தாங்கள் சத்யநாராயண பூஜை செய்ததை மறந்து போனதை உணர்ந்தாள். அவள் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து பூஜை செய்யும்போது தன் கணவரும் ,மருமகனும் திரும்பி வரக் கண்டாள். சத்யநாராயண பூஜையை செய்ததால் அவர்களின் குடும்பத்திற்கு நன்மை கிடைத்தது.

 

நான்காம் பாகத்தில் வியாபாரியின் கதை தொடர்கிறது. வியாபாரி திரும்பியதை கண்ட சந்தோஷத்தில் கலாவதியும், தாயாரும் சத்யநாராயண பூஜையின் பிரசாதத்தை உண்ண மறந்தார்கள். இதனால் கோபம் கொண்ட நாராயணர் அவர்களின் கப்பல்களை கடலில் மூழ்கடித்தார்.தம் தவறை உணர்ந்து அவர்கள் பிரசாதத்தை உண்டவுடன் அவர்களுக்கு தாங்கள் செய்த பூஜையின் மகிமையும் பிரசாதத்தின் மகிமையும் புரிந்தது.

 

ஐந்தாம் பாகத்தில் நாம் சத்யநாராயண பூஜையை அலட்சியம் செய்த ஒரு அரசனை பற்றி அறிகிறோம். சில கிராமத்தவர்கள் இந்த பூஜை செய்த போது, அந்த அரசன் அதனை மதிக்கவில்லை. அதன் விளைவாக பல இன்னல்களை அனுபவித்தான். பூஜையின் பெருமை அறிந்து பகவானை வேண்டிய போது, இன்னல்களில் இருந்து விடுபட்டான்.

 

சத்யநாராயண கதை இவ்வாறாக பூஜையின் பெருமை, பிரசாதத்தின் மகிமை, பூஜை செய்ய மறந்தால் விளையும் கேடு இவற்றை தெளிவாக எடுத்துரைக்கிறது.

 

 

Service Categories: 
Share this:
Tags:

About admin

[field_information]
 • Website
 • Google+
 • Rss
 • Pinterest
 • Instagram
 • LinkedIn
 • Vimeo
 • Youtube
 • Flickr
 • Email

  Leave a Reply

  CAPTCHA
  This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
  2 + 1 =
  Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.