காமதா ஏகாதசி சித்திரை மாதம் வளர் பிறையை ஒட்டிய ஏகாதசி ஆகும். காமதா என்பதன் அர்த்தம் நமது விழைவுகளை பூர்த்தி செய்வது என்பதாகும். இந்த ஏகாதசி விரதம் இருந்து மகாவிஷ்ணுவை துதிப்பவருக்கு சாப கேடுகள் நீங்கும். பாபங்கள் தொலையும். தூய சுய சிந்தனை உருவாகும். ஒரு பிராமணனைக் கொன்ற பாபத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.
. இந்த வருடம் காமதா ஏகாதசி மார்ச் மாதம் 27ம் தேதி (27-3-2018) வருகிறது.
காமதா ஏகாதசியின் கதை
காமதா ஏகாதசியைப் பற்றிய கதை கிருஷ்ண பரமாத்மா தர்மருக்கு எடுத்து சொன்னதாகும். எல்லா ஏகாதசி கதைகளுமே கிருஷ்ணரால் யுதிஷ்டருக்கு சொல்லப்பட்டவை ஆகும்.
காமதா ஏகாதசி ஒரு கந்தர்வனைப் பற்றியது. ரத்னபுரம் என்ற பட்டினத்தை புண்டரிகர் என்ற ராஜா ஆண்டு வந்தார். அந்த நகரத்தில் பல கந்தர்வர்களும், கின்னரர்களும், அப்சரசுகளும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுள் லலித் லலிதா என்ற கந்தர்வ தம்பதியர் மனமொத்து அன்புடன் வாழ்ந்து வந்தார்கள். லலித் என்பவர் பாடுவதில் வல்லவர். லலிதா ஆடுவதில் வல்லவர்.அந்த நகரத்தில் பாம்புகளும் வாழ்ந்து வந்தன.
HANDPICKED RELATED CONTENT:
|
ஒரு நாள் ராஜசபையில் அப்சரசுகளின் நடனத்திற்கு லலித் பாடிக் கொண்டு இருந்தார். அவரோடு லலிதா இல்லை. அவர் இல்லாமல் தவித்த லலித் பாடுவதில் தவறு செய்தார். இதனை கவனித்து கொண்டிருந்த ஒரு சர்ப்பம் மன்னரிடம் அதனை சுட்டிக் காட்டியது. வெகுண்ட மன்னர் லலிதை ஒரு நர மாமிசம் சாப்பிடும் ராக்ஷனாக மாற சபித்தார். லலித்தும் அப்படியே மாறினார்.
வருத்தமடைந்த லலிதா லலித் செல்லும் இடங்களுக்கு எல்லாம் உடன் சென்றார். நர மாமிசம் தேடி காடுகளில் அலைந்தார் லலித். மனமுடைந்த லலிதாவும் அவர் பின் சென்றார். ஒரு இடத்தில் ஷிரிங்கி ரிஷியை கண்டு அவரிடம் தனது நிலையை எடுத்துரைத்தாள். அவரும் காமதா ஏகாதசியின் மகிமையை எடுத்து சொல்லி அவளை அந்த ஏகாதசி விரதமிருக்கப் பணித்தார்.
அவ்வண்ணமே காமதா ஏகாதசி விரதமிருந்து தனது கணவருக்கு சாப விமோசனம் வேண்டினாள் லலிதா. தனது விரத பலனையும் கணவருக்கு அர்ப்பணித்தாள். பலனாக லலித் தனது அழகிய உருவத்தை மீண்டும் பெற்றார். லலிதாவுடன் சந்தோஷமாக வாழ்ந்தார்.
HANDPICKED RELATED CONTENT:
ஆமல்கீ ஏகாதசி |
இவ்வாறாக காமதா ஏகாதசி விரதமிருப்பவர்கள் தங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். சாப விமோசனம் பெற முடியும். தமது பாப சுமையிலிருந்து விடுபட முடியும்..
Today, மார்ச் 4, 2021
Sunrise: 06:23
Sunset: 18:18
06:30-12:30
Partly cloudy
21 °C / 69 °F
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply